தேடல் · Search: நலிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
76 இல் 51–75 · 51–75 of 76
வீக்கத்தைக் குறைக்கும் தன்மையுடைய ஒர் இயக்குநீர், ஊக்குபொருள். மின் பகுப்பு நடவடிக்கை மிகக் குறைவாக உடையது. இது புரதச் சிதைவைத் தூண்டும் தன்மையுடையதான தசையால், நலிவு உண்டாகும் — triamcinolone
குரு தியில் அளவுக்குமீறி கால்சியம் இருத்தல். இதனால், பசியின்மை, அடிவயிற்றில் வலி, தசைவலி, உடல் நலிவு உண்டாகிறது — hypercalcaemia
குருதியில் அளவுக்கு மிகுதியாகப் பொட்டாசியம் இருத்தல். இதனால் குமட்டல், வயிற்றுப்போக்கு, தசை நலிவு உண்டாகும் — hyperkalaemia
நீண்டு ஒடுங்கிய, திசுப்பாய்ம நலிவு உயிரணுக்கள். இது இடமகல் கருப்பை உட்படலத்தில் உள்ளது போன்று மிகை வண்ணக் கருமையத்தைக் கொண்டிருக்கும். இவை, எலும்புத் தசைப்பற்றில் உள்ளது போன்று எளிதில் பொ… — maked nuclei
அது தன் இனக்கீற்று ஆதிக்கம்பெற்ற தசைநலிவுநோயின் உள் மையம். இது கைக்குழந்தைகளிடம் அரிதுயில் நிலையையும், மையம் நோக்கிய தசைநலிவையும் உண்டாக்குகிறது — central core myopathy
பார்வை நரம்புகளில் பரம்பரையாக ஏற்படும் நலிவு. இதனால் வயது வந்த இளம் ஆண்கள் வேகமாகப் பார்வை இழக்கிறார்கள். ஜெர்மன் கண் நோயியலறிஞர் தியோடார் லெபர் பெயரால் அழைக்கப்படுகிறது — Leber's optic atrophy
பெரும்பாலும் உணர்ச்சியி னால் உண்டாகிற தசை நலிவு — neuromyasthenia
எலும்பு நலிவு நோயின் போது முதுகுத்தண்டில் உள்ள முள் எலும்புகள் அதிக அழுத்தம் தருவதால் எலும்பு இடைவட்டுகள் வெளிப்பக்கமாகப் பிதுங்கி வருதல் — ballooning
எலும்பு நலிவு நோயின் போது இரண்டு பக்கமுள்ள தொடை எலும்புகளின் தலைப்பகுதிகள் மிகு அழுத்தம் தருவதால் இடுப்புக் கூட்டின் நடுங்கிணைவு எலும்பு முன் பக்கமாக வளையும் நிலைமை — beaked pelvis
இது வரையறைக்குட்பட்ட தசை நலிவு நோய். இது இளம் வயதில் ஏற்படும். இதனால், இடது, வலது இதயக் கீழறைகள் இரண்டிலும் உட்பாய்வு வரிகள் அடர்த்தியாகக் கடினமாகி, முக்கிளைநரம்பு, நெஞ்சுச் சவ்வடைப்பு… — endomyocardial fibrosis (EMF)
எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொட… — marble bone disease
எலும்புப் பொருள் இணைப்பு வீதம் குறைவதால் எலும்புத் திரட்சியில் ஏற்படும் நலிவு — osteopaenia
விலா எலும்புகளில் அடர்த்தியைக் காட்டும் மார்பு ஊடுகதிர்ப்படம். இதில் சிறைச் சாலைச் சன்னல் கம்பிகளைப் போன்று எலும்புகள் கிடை மட்டப்பட்டைகளாகத் தோன்றும் எலும்பு நலிவு நோய், அரிவாள் உயிரணுப் பற்… — Jail bars sign
மைய நரம்பு மண்டலம் நலிவுறுவதால் உண்டாகும் மரபு நோய். இது மனக்கோளாறு நிலையுடன் தொடர்புடையது. கிராபே விவரித்தது — krabbe disease
கடும்புரதச் சத்துக் குறைபாட்டினால் பிறந்த குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும் ஏற்படும் நோய். இதனால், இரத்தசோகை, உடல் நலிவு, நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு இறுதியில் மரணம் விளையும் — kwashiorkor
சுவாசத் தசை நலிவு எனப்படும் தசைநோய். இது நுரையீரல் சிறு உயிரணுப் புற்றுநோயுடன் சேர்ந்து ஏற்படுகிறது. இதனால், இடுப்புக்குழி, தோள் என்பு வளையத் தசைகள் நலிவடைதல், தசை நாண் இயக்கங்களை இ… — Eaton-Lambert syndrome
உடலில் நோய்த் தன்மையுள்ள கொழுப்புப் படிதல். இதனால் திசுக்கள் நலிவுறுகின்றன. குறிப்பாக, ஈரற்குலை, சிறுநீரகம், இதய நோய்களின்போது இது ஏற்படுகிறது — fatty degeneration
மின் பகுப்புச் சம்நிலை சீர்குலைதல். அளவுக்கு அதிகமான வாந்தியின்போது அல்லது வயிற்றுப் போக்கின்போது ஏற்படுகிறது சிறுநீர்ப் போக்கை அதிகரிக்கும் மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்துவதாலும் உண்… — potassium deficiency
முதுகெலும்பு இடைத்தகடு நலிவுற்று, அத்தகட்டின் சுற்று விளிம்பில் புதிய எலும்பு உருவாதல், இது பொதுவாக தண்டுவட எலும்பு வீக்கம் எனப்படும் — spondylosis deformans
சிறுநீர் வெளியேறாத காரணத்தால் யூரியாவின் அளவு குருதியில் மிகைப்பட்டு உண்டாகும் இரத்த சோகை, இது சிறுநீரகங்களில் அல்லது உடலின் வேறெங்கும் ஏற்படும் நோய்களினால் ஏற் படுகிறது. இந்நோய் முற்… — uraemia
வெளிப் படையான ஈட்டிய நோய்த் தடைக்காப்பு நோயைவிடச் சற்று கடுமை குன்றிய நோய் நிலை. எய்ட்ஸ் நோய்க் கிருமிகள் பீடித்த சிலரிடம் இந்தக் கோளாறு காணப்படும். இதன் நோய்க்குறி புலனாகாமல் இருக்கும் அ… — aids related complex
முழங்கையில் முன்கை எலும்பில் ஏற்படும் புழை. இதனால் வலி, மரத்துப் போதல், பின்னர் தசை நலிவு ஏற்படும் — cubital tunnel syndrome
குழந்தைகளிடம் பரம்பரையாக ஏற்படும் தசை நலிவு நோய். இது தண்டுவடத்தில் பின்புறக்கொம்பு உயிரணுக்கள் இழப்பு காரணமாக உண்டாகிறது. இதனை ஒரு சுவீடன் நரம்பியலறிஞர் விவரித்துக் கூறினார். நான்கு… — Kugelberg-Welander disease
நரம்பு மண்டலம் நேரடியாகத் தொடர்பு கொள்ளாதிருக்கிற உக்கிர வேகம் தொடர்பான நரம்புக் கோளாறுகள் மற்றும் தசை நலிவுகள் — Denny-Brown neuropathy
உரு மாற்றம் போன்ற மெய்ப்பாட்டினை உண்டாக்கும் ஒரு நோய். இதனால், ஒயாத உறுப்புகள் நடுக்கம், விரல்கள் உருள்வது போன்ற உணர்வு அறிகுறிகள் தோன்றும் போதைப் பொருளாலும் உண்டாகும். இது பெரும்பாலும் 40… — parkinsonism