சொல்

col
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மொழியில் ஒரு கூற்றின் (சொற்றொடரின்) பொருள் தரும் ஒரு கூறு; பல சொற்கள் தக்கவாறு சேர்ந்து பொருள்தரும் ஒரு கூற்று ஆகும்; பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல் போன்றவை சொற்களின் சில வகைகள்; வார்த்தை — say, tell
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொல்)
2.
கூறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (சொல்)
3.
நெல், புகழ், மொழி, வாக்கியம், சரஸ்வதி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 200)
4.
வார்த்தை, (குறள் 65, 66), சொற்களை உண்டாக்குதல், (குறள் 70); மற்றவர்களுக்கு நன்மை தரும் இனிய சொல், (குறள் 97); அறிவுரை கூறுபவர்களது சொல், (குறள் 389); பழிச்சொல், (குறள் 184, 389); உரையாடிட, (402}; அமைச்சரது சொல், (குறள் 643); சினந்து கூறும் நெருப்புச் சொல், (குறள் 1147).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 136)
5.
ஒரு சொல்லின் பகுதி — slab
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சொற்பகுதி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1340)
6.
துண்மிகளின், எழுத்துகளின் அல்லது எட்டியல்களின் தருக்க முறை அலகு. இது ஒரு தனி அலகாகக் கருதப்படுகிறது. இதனை ஒரே சேமிப்பு அமைவிடத்தில் சேமித்து வைக்கலாம் — word
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தகவல், தரவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1576)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dfwk6hy8/

தமிழ்
“சொல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfwk6hy8/
APA
Oliyon Research. (2026). சொல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dfwk6hy8/
MLA
"சொல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dfwk6hy8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment