பொருள்

poruḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
புலன்களால் உணரக் கூடியது - a thought ,an idea,
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருள்)
2.
உடைமை - wealth, possession, object,கூர்நோக்குthing
அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். குறள்-178
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருள்)
3.
மெய்மை - reality,good
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருள்)
4.
சுணங்கு - attractive part, as the breast of a woman
மூலம் · source: தமிழ் விக்சனரி (பொருள்)
5.
தேமல், உபமேயம், திரவியம், காரியம், தருமம், அறம், கடவுள் தன்மை, சொற்பொருள், பிள்ளை, பொன், பயன், முத்தி அறிவு, உண்மை, தத்துவம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 313)
6.
அறம், பொருள், இன்பம், வீடு (நாற்பொருள்)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 429)
7.
கல்விப் பொருள், செல்வப் பொருள், புத்திரப் பொருள், (முச்செல்வம்).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)
8.
மெய்ப் பொருள், உண்மை, (குறள் 5); அறம், (குறள் 91,254); உறுதிப் பொருள், (குறள் 122, 128); உரை, நூல், (குறள் 141); குணம், (குறள் 307); செல்வம், (குறள் 63, 171, 176, 212); பொருள் தேடுவதையே, (குறள் 1230).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 178)
9.
அர்த்தம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 213)
10.
உருவாக்குபவருக்கு நிரலாக்கத் தொடர் பொருள்கள் திரும்பப் பயன்படுத்தக்கூடிய குறியீட்டுப் பிரிவுகள்.சக்கரத்தினை ஒவ்வொரு முறையும் திரும்பக் கண்டுபிடிக்க வேண்டிய தேவையில்லாததுபோல் முந்தைய வேலையின் புதிய பயன்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றவை.இறுதிப் பயனாளருக்கு அவை திரைப்பொருள்கள் (ஐக்கான்கள்.கோப்புப் பெயர்கள், விரிதாள் வரிசைகள், சொற்கட்டங்கள் போன்றவை.இவைகளை பொருள்களைப் போன்று கையாள முடியும்.சான்றாக ஒரு கோப்பின் பெயரை அச்சுப்பொறி ஐகானுக்கு இழுத்து வந்தால் அக்கோப்பு அச்சிடப்படும் — object
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இலக்கு, தகவமைவு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1025)
11.
பருப்பொருள் அல்லது மூலக் கூறு அல்லது பிராணி அல்லது தாவர மூலக்கூறுகள் தொகுதி வடிவற்ற பொருளில் அமைப்புக்கூறுகள் பொதிந்திருத்தல். — substance
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பண்டம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1046)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z75nyce2/

தமிழ்
“பொருள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z75nyce2/
APA
Oliyon Research. (2026). பொருள். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z75nyce2/
MLA
"பொருள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z75nyce2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment