காது

kātu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாந்தர்கள், விலங்குகள் ஒலியைக் கேட்டு உணர உதவும் உடல் உறுப்பு. — ear
மூலம் · source: தமிழ் விக்சனரி (காது)
2.
ஏனம், பாத்திரம், குவளை போன்ற கொள்கலங்களில் கையால் பிடித்து தூக்க கொள்ள வசதியாக இருக்குமாறு அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காது)
3.
மடக்குக் கத்தியின் கூரான பகுதி சொருகி நிற்கும் துளையுடைய பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காது)
4.
கொலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காது)
5.
கேள்வி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காது)
6.
சுருதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (காது)
7.
புகையிலையின் காம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (காது)
8.
கவண்கல் (உண்டிகோலில் கல்) வைக்கும் இடம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (காது)
9.
கேட்கும் திறனுள்ள உறுப்பு. இது மூன்று பகுதிகளை உடையது. வெளிச்செவி, நடுச்செவி, உட்செவி என அவை அழைக்கப்படுகின்றன. வெளிச்செவியில் காது மடலும் செவித்துளையும் அடங்கும். நடுச்செவியில் மூன்று எலும்புகள் அடுத்தடுத்துள்ளன. நடுச்செவிக்கும் வெளிச்செவிக்கும் நடுவில் 'செவிப்பறை' எனும் சவ்வு உள்ளது. உட்செவியில் நத்தை எலும்பு, அரைவட்டக் குழல்கள், செவிநரம்பு உள்ளன — auris
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: செவி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 162)
10.
காது தொண்டை அமைப்பு, செயற்பணி நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல் காது. தொண்டை தனித்தனி இயல்களாகவும் உள்ளன. — otolaryngology
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மூக்கு, தொண்டை நோயியல், செவி மிடற்றியல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 783)

தொகுதிகள் · Categories: உடல் உறுப்புகள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/pkj2gcnw/

தமிழ்
“காது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkj2gcnw/
APA
Oliyon Research. (2026). காது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/pkj2gcnw/
MLA
"காது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/pkj2gcnw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment