அறை

aṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு கட்டிடத்திற்குள் நான்கு சுவர்களால் பிரிக்கப்பட்டிருக்கும் இடம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறை)
2.
கன்னத்தில் உள்ளங்கையால் அடிக்கும் அடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறை)
3.
சொல், திரை, வீட்டின் பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அறை)
4.
அடி, பாத்தி, ஒலி, வகுத்த இடம், பாசறை, கற்பாறை, குகை, வஞ்சனை, மாளிகை, அற்றது, வஞ்சினம், குன்று, மலையுச்சி
5.
வீட்டிலுள்ள அறை, (குறள் 913); அடிக்கப்படும் பறை, (குறள் 1180).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 37)
6.
கூறு, இடம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 38)
7.
1. ஒரு எழுத்து, ஒரு எட்டியல் அல்லது ஒரு சொல் போன்ற தகவலின் ஒரு அலகை மட்டும் சேமிக்குமிடம். 2. ஒரு மின்னணு விரிதாளின் அடிப்படை வடிவத்தை ஏற்படுத்தும் ஒரு தொகுப்பு அல்லது அச்சு வார்ப்புருவில் (matrix) உள்ள தனி ஒருங்கிணைப்பு இடம் — cell
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: சிற்றம், சிற்றறை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 125)
8.
அறுவை மருத்துவம் செய்யப்பட்ட நோயாளிகள் மயக்கம் தெளிந்து எழாத நிலையில், வார்டுக்கு கொண்டு செல்லப்படுமுன் மயக்கம் தெளிய கவனிப்பு தருவதற்கான அறுவை அரங்கத்துக்கு அருகிலுள்ள அறை — recovery room
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 934)
9.
முக்கு வழி, சிரைக்குழி — sinus
கலைச்சொல் · Technical உயிரியல் ஒத்த சொற்கள் · syn: குழி, வழி · மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 395)
10.
இதயத்தின் கீழறை. இது வலக்கீழறை இடக்கீழறை என இருவகைப்படும். குருதியைப் பெருந்தமனிக்கும் நுரையீரல் தமனிக்கும் செலுத்துவது பா, auricle — ventricle
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 458)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jke6xkhz/

தமிழ்
“அறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jke6xkhz/
APA
Oliyon Research. (2026). அறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jke6xkhz/
MLA
"அறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jke6xkhz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment