காட்சி
kāṭci
பொருள்கள் · Senses
1.
Sight, Vision, Appearance, Scene
தமிழ் விளக்கம் இன்னும் இல்லை. விளக்கம் சேர்க்கவும் · Add a Tamil definition
2.
அற்புதம், தன்மை, பிரத்தியட்சம், தோற்றம், நூல், அழகு, காணல், அறிவு
3.
மனக் கண்முன் தோன்றும் அறிவு, (குறள் 174); மயக்க மற்ற சுத்த அறிவுடையோர், (குறள் 199); கடமையுணர்ந்த அறிவுடை பார், (குறள் 2.18); தெளிந்த அறிவுடை யார், (குறள் 654); அறிவினையுடை யார், (குறள் 699)
4.
பொருள்: கண்ணால் காணுதல். வகை: 1. வாயில்,மானதம்,தன்வேதனை,யோகம் என நான்கு 2. பொதுக்காட்சி (ரூபம்) அல்லது நிருவிகற்பம், ஐயக்காட்சி (தரிசனம்) 3.தெளி வுக்காட்சி (சுத்தி) என மூன்று வகை. இம்மூன்றும் முறையே குரு அறிவுரையைக் கேட்டல் சிந்தித்தல், தெளிதல் என்பவற்றால் நிகழ்பவை. விளக்கம் : 1. வாயிற் காட்சி: புறத்தே உள்ள சுவை,ஒளி,ஊறு,ஓசை நாற்றம் ஆகியவை ஐம்பொறிகளால் அறியப்படுபவை. 2.மானதக் காட்சி: ஐம்பொறிகளால் அறியப்படும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவை மனம் முதலிய அகக்கருவிகளால் அறியப்படுதல். 3.தன்வேதனைக்காட்சி ; அகக்கருவிகளுள் மனத்துக்குமேலாய்ப் புத்தியில் தோன்றியவைகள் ஆன்மாவினால் உணரப்படுதல் 4.யோகக்காட்சி: யோக முறைகளால் அறிவைத் தடைசெய்யும் மல ஆற்றல்களை ஒருவாறு , நீக்கி, ஒரிடத்து ஒரு காலத்தில் ஆங்கிருந்து மூவிடத்து முக் காலப் பொருள்களையும் காண்கின்ற காட்சி. 5.நிருவிகற்பக்காட்சி: தத்துவங் களிலிருந்து தான் வேறு எனக் காணல், தன் உண்மை நிலை அறியாமை. 6.ஐயக்காட்சி : தன் உண்மை நிலை அருளொடு பிரிப்பின்றி நிற்பதை அறிந்தும் அவ்விரு ளில் அடங்காமல் அருளிலும் கருவியிலும் மாறிமாறிப் போக்குவரத்தால் நிற்றல். 7.தெளிவுக்காட்சி : அருளில் அடங்கி அடிமையாய் நிற்றல்.
5.
1. திரையிலோ அல்லது காட்சியிலோ தரவுகளைக் குறிப்பிடல், 2. கணினி முகப்பில் உள்ள ஒளி அல்லது குறிப்பிகள். 3. வரைகலை தரவுகளை வெளியீட்டுச் சாதனத்தில் காட்சியாக உருவாக்கும் செயல்
— display
6.
ஒரு தரவுத் தளத்தின் உள்ளடக்கங்களை பயன்பாட்டாளருக்கு வழங்குகின்ற முறை. இது, தரவுத் தளத்தில் புலங்களும், பதிவுகளும் சேமித்து வைக்கப்பட்டுள்ள அதேமுறையில் காட்சியில் காட்டப்பட வேண்டியதில்லை. பல்வேறு பயன்பாட்டாளர்களின் தேவைக்கேற்ப தனித்த முறையில் காட்டப்படுகிறது
— view
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hd7pdree/
தமிழ்“காட்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hd7pdree/APA
Oliyon Research. (2026). காட்சி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hd7pdree/MLA
"காட்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hd7pdree/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment