வெளிப்பாடு

veḷippāṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மறைதலின்றி வெளிப்பட்டுத் தோன்றுகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிப்பாடு)
2.
ஒன்றிலிருந்து வெளிப்படுவது; வெளியீடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிப்பாடு)
3.
புதிதாய்க் கண்டு பிடிப்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிப்பாடு)
4.
பெரியோர்க்கு அளிக்கும் பரிசு/கையுறை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வெளிப்பாடு)
5.
1. ஒரு கணினியின் உள்முகச் சேமிப்பு அலகிலிருந்து ஒரு சேமிப்பிக்கு அல்லது வெளிப்பாட்டுச் சாதனத்திற்கு மாற்றப்படும் தரவு. 2. கணினியினால் செய்முறைப்படுத்தப்பட்ட தரவு வின் இறுதி முடிவு. இது உட்பாடு (input) என்பதற்கு வேறுபட்டது — output
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வெளிப்படுபொருள், வெளியீடு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1059)
6.
கருப்பை யிலிருந்து நச்சுக்கொடி வெளியேறுதல். தாயின் மார்பகத்திலிருந்து பால் வெளிப்படுதல் போன்ற வெளிப்பாடுகள். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக பாவங்களையும் குறிக்கும் — expression
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பிதுக்கல், முகபாவம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 449)
7.
1. வழித் தோன்றல். 2. சீழ் அல்லது இரத்தம் வெளியேறுதல் — issue
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 602)
8.
ஒரு நோயுடன் தொடர்புடைய நோய்க்குறி அல்லது அடையாளம் இருப்பது வெளிப்படையாகத் தோன்றுதல் — manifestation
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 663)
9.
நம் விருப்பங்களும் உளவெழுச்சிச் சிக்கல்களும் பிறரிடம் இருப்பனவாக எண்ணிச் செயற்படல். தகைக்கேட்டின் ஒரு வகை விளைவு. 2. வீழல். (ப.து) — projection - 1
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 349)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/haywf79e/

தமிழ்
“வெளிப்பாடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/haywf79e/
APA
Oliyon Research. (2026). வெளிப்பாடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/haywf79e/
MLA
"வெளிப்பாடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/haywf79e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment