துலா ராசியில், மிகு ஒளியுடன் ஆரஞ்சு நிறம் உடைய விண் மீன், சுவாதி (α-Bootes, Arcturus) ஆகும். இதை ஒளி மீன் எனவும் கூறுவர். இருபத்தி ஏழு விண்மீன்களில் இது பதினைந்தாம் விண் மீனாகும். பங்குனி, சித்திரை மாதங்களில் முன் இரவில் , கீழ் வானில் சற்றே வடக்காகச் சப்த ரிஷி மண்டலத்தின் வளைந்த பகுதியைத் தொடர்ந்து, தெற்கே தெரியும். சூரியனைப் போல் 18,000 பங்கு பரிமாணமும், 50 ஒளியாண்டுகள் தொலைவும் உடையது என்று கண்டு பிடித்துள்ளனர். —பங்கஜம் கணேசன் <!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->