{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/wub5g34w/", "data": {"id": "wub5g34w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/wub5g34w/", "kind": "article", "headword": "சுவாதி", "romanization": "cuvāti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:58.303412+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "துலா ராசியில், மிகு ஒளியுடன் ஆரஞ்சு நிறம் உடைய விண் மீன், சுவாதி (α-Bootes, Arcturus) ஆகும்.", "body_ta": "துலா ராசியில், மிகு ஒளியுடன் ஆரஞ்சு நிறம் உடைய விண் மீன், சுவாதி (α-Bootes, Arcturus) ஆகும். இதை ஒளி மீன் எனவும் கூறுவர். இருபத்தி ஏழு விண்மீன்களில் இது பதினைந்தாம் விண் மீனாகும். பங்குனி, சித்திரை மாதங்களில் முன் இரவில் , கீழ் வானில் சற்றே வடக்காகச் சப்த ரிஷி மண்டலத்தின் வளைந்த பகுதியைத் தொடர்ந்து, தெற்கே தெரியும். சூரியனைப் போல் 18,000 பங்கு பரிமாணமும், 50 ஒளியாண்டுகள் தொலைவும் உடையது என்று கண்டு பிடித்துள்ளனர். —பங்கஜம் கணேசன்\n\n<!----மேலே உள்ள பிரிக்கும் கோட்டை நீக்க வேண்டாம். முந்தைய தலைப்பு இங்கு முடிவுற்றது. புதிய தலைப்பு அடுத்து ஆரம்பம் ஆகிறது. பக்க ஒருங்கிணைப்பின் போது, தலைப்புகளைப் பிரிக்க இக்கோடு தேவை. ---->"}}