நம்மாழ்வார்

nammāḻvār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சடகோபர், மாறர் என்றும் கூறப்படுபவர். வைணவ சமய வேளாள மரபினர். திருநெல்வேலி ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். ஆழ்வார்களில் தலைசிறந்தவர். புளிய மரத்தடியில் அமர்ந்து யோகம் புரிந்து திருமால் திருவருள் பெற்றவர். திருமால் இவர் மீது பற்றுடையவர் என்பது கம்பரை நோக்கி "நந்தம் சடகோபனைப் பாடினையோ?" என்று கேட்டதால் விளங்குகிறது. இவர் பாடிய பாடல்கள் வேதத்தின் சாரம் எனப்படும். இவரைப் போற்றியே மதுரகவியாழ்வார் திருமாலின் திருவருள் பெற்றார். இவர் பாடிய பாடல்கள் திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி, திருவிருத்தம் என்பன.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 605)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/uynv2n4x/

தமிழ்
“நம்மாழ்வார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uynv2n4x/
APA
Oliyon Research. (2026). நம்மாழ்வார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/uynv2n4x/
MLA
"நம்மாழ்வார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/uynv2n4x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment