பண்பு

paṇpu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உயிருள்ள, உயிரற்ற பொருளின் தன்மை. — character, nature
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்பு)
2.
குணம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பண்பு)
3.
தகுதி, அழகு, முறை, நன்மை, செயல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 270)
4.
இயல்பு, குனம், (குறள் 45,62).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 166)
5.
விண்டோஸ் குடும்ப (95/98/ எம்இ/என்டி/2000) இயக்க முறைமைகளில் ஒரு பொருள் அல்லது சாதனத்தின் பண்பியல்பு அல்லது அளபுருவைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு கோப்பின் பண்புகள் அதன் வகை, அளவு, உருவாக்கப் பட்ட நாள் போன்றவற்றை குறிக்கின்றன. அந்த கோப்பின் பண்பியல்புத்தாளில் இது போன்ற விவரங்களை அறியலாம் — property
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பண்பியல்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1183)
6.
ஒருவரின் ஒட்டு மொத்த மன இயல்புகள்; குறிப்பாக அவரது நடத்தைமுறை நோயாளியின் இயல்பான நடத்தையிலிருந்து மாறுபட்ட விசித்திர நடத்தை முறையாக இருக்கலாம். வழக்கமாக மரியாதைக்குரியவராக நடந்து வந்தவர் இழிவாக நடந்து கொள்ளுதல் மனநோய் மூளைநோயின் காரணமாக இருக்கலாம் — character
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: நடத்தை, இயல்பு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 277)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t2kqdneb/

தமிழ்
“பண்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t2kqdneb/
APA
Oliyon Research. (2026). பண்பு. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/t2kqdneb/
MLA
"பண்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t2kqdneb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment