இராசகிருகத்தில் வாழ்ந்த அந்தணர். இவர் தமையன் புத்தரால் மதமாற்றம் செய்யப்பட்டது அறிந்து, உணர்ச்சி வயப்பட்டவராய்ப் புத்தரைக் குறை கூறிக் கடுமையாகத் திட்டினார். ஆனால் இவர் பின்னர்த் தம் தமையனாருடனும் ஏனைய உடன்பிறப்புகளான அசுரிந்தகர், சுந்தரி, பிராங்கிகா என்பவர்களுடனும் புத்தசமயத்தைத் தழுவினார்.