கொடுக்கப்பட்ட b,c எனும் எண்களின் கூட்டுத் தொகையை a என்னும் எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் மதிப்பும், a என்னும் எண் கொண்டு, b.c ஐத் தனித் தனியாகப் பெருக்கி, பிறகு கூட்டுத்தொகை கண்டால் கிடைக்கும் மதிப்பும் சமமாக இருப்பின், அவ்விதியைப் பங்கீட்டு விதி (distributive law) எனலாம். அதன் படி a(b + c) = ab + ac எனக் கிடைக்கிறது. இதே போல, a(b + c + d) = ab + ac + ad என அமைவதைப் பார்க்கலாம். a(b + c) = ab + ac என்பது இடப் பங்கீட்டு விதி எனவும், (b+c)a = ba + ca என்பது வலப் பங்கீட்டு விதி எனவும் குறிப்பிடப் படும். பங்கீட்டு விதிகள் கணிதவியலின் அனைத்துத் துறைகளிலும் அடிப்படையாக விளங்குகின்றன. —எம். அரவாண்டி