பங்கீட்டு விதி
paṅkīṭṭu viti
கொடுக்கப்பட்ட b,c எனும் எண்களின் கூட்டுத் தொகையை a என்னும் எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் மதிப்பும், a என்னும் எண் கொண்டு, b.c ஐத் தனித் தனியாகப் பெருக்கி, பிறகு கூட்டுத்தொகை கண்டால் கிடைக்கும் மதிப்பும் சமமாக இருப்பின், அவ்விதியைப் பங்கீட்டு விதி (distributive law) எனலாம்.
கொடுக்கப்பட்ட b,c எனும் எண்களின் கூட்டுத் தொகையை a என்னும் எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் மதிப்பும், a என்னும் எண் கொண்டு, b.c ஐத் தனித் தனியாகப் பெருக்கி, பிறகு கூட்டுத்தொகை கண்டால் கிடைக்கும் மதிப்பும் சமமாக இருப்பின், அவ்விதியைப் பங்கீட்டு விதி (distributive law) எனலாம். அதன் படி a(b + c) = ab + ac எனக் கிடைக்கிறது. இதே போல, a(b + c + d) = ab + ac + ad என அமைவதைப் பார்க்கலாம்.
a(b + c) = ab + ac என்பது இடப் பங்கீட்டு விதி எனவும், (b+c)a = ba + ca என்பது வலப் பங்கீட்டு விதி எனவும் குறிப்பிடப் படும். பங்கீட்டு விதிகள் கணிதவியலின் அனைத்துத் துறைகளிலும் அடிப்படையாக விளங்குகின்றன. —எம். அரவாண்டி
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 391)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/spq4w4yr/
தமிழ்“பங்கீட்டு விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/spq4w4yr/APA
Oliyon Research. (2026). பங்கீட்டு விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/spq4w4yr/MLA
"பங்கீட்டு விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/spq4w4yr/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment