{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/spq4w4yr/", "data": {"id": "spq4w4yr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/spq4w4yr/", "kind": "article", "headword": "பங்கீட்டு விதி", "romanization": "paṅkīṭṭu viti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:59:04.704188+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கொடுக்கப்பட்ட b,c எனும் எண்களின் கூட்டுத் தொகையை a என்னும் எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் மதிப்பும், a என்னும் எண் கொண்டு, b.c ஐத் தனித் தனியாகப் பெருக்கி, பிறகு கூட்டுத்தொகை கண்டால் கிடைக்கும் மதிப்பும் சமமாக இருப்பின், அவ்விதியைப் பங்கீட்டு விதி (distributive law) எனலாம்.", "body_ta": "கொடுக்கப்பட்ட b,c எனும் எண்களின் கூட்டுத் தொகையை a என்னும் எண்ணால் பெருக்குவதால் கிடைக்கும் மதிப்பும், a என்னும் எண் கொண்டு, b.c ஐத் தனித் தனியாகப் பெருக்கி, பிறகு கூட்டுத்தொகை கண்டால் கிடைக்கும் மதிப்பும் சமமாக இருப்பின், அவ்விதியைப் பங்கீட்டு விதி (distributive law) எனலாம். அதன் படி a(b + c) = ab + ac எனக் கிடைக்கிறது. இதே போல, a(b + c + d) = ab + ac + ad என அமைவதைப் பார்க்கலாம்.\n\na(b + c) = ab + ac என்பது இடப் பங்கீட்டு விதி எனவும், (b+c)a = ba + ca என்பது வலப் பங்கீட்டு விதி எனவும் குறிப்பிடப் படும். பங்கீட்டு விதிகள் கணிதவியலின் அனைத்துத் துறைகளிலும் அடிப்படையாக விளங்குகின்றன. —எம். அரவாண்டி"}}