திருச்சிற்றம்பலக் கோவையார்
tirucciṟṟampalak kōvaiyār
பொருள்கள் · Senses
1.
இது திருக்கோவையார் என்றும் கூறப்படும். இதன் அருமை பெருமை அறிந்தே இதற்கு ஆர் விகுதி கொடுத்தும், திரு என்ற அடையாளம் கொடுத்தும் திருக்கோவையார் என்று குறித்துள்ளார். தமிழில் பல கோவை நூல்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் அக்கோவை யார் மீது பாடப்பட்டதோ, அன்றி எத்தலத்தின் மீது பாடப்பட்டதோ, அப்பாட்டுடைத் தலைவன் பெயரையும் தலத்தின் பெயரையும் சார்த்தி வழங்குவர். ஆனால், எந்தவிதமான அடைமொழியும் இன்றிக் கோவை என்ற அளவில் இத் திருக்கோவையாரைத்தான் உணர்த்தும். பாவை பாடின வாயால் கோவை பாடுக என்று மணிவாசகரை நடராஜ பெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இது பாடப்பட்ட நூலாயின் இதன் மாண்பைக் கூறவும் முடியுமோ?
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/r9vrfr9r/
தமிழ்“திருச்சிற்றம்பலக் கோவையார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9vrfr9r/APA
Oliyon Research. (2026). திருச்சிற்றம்பலக் கோவையார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/r9vrfr9r/MLA
"திருச்சிற்றம்பலக் கோவையார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/r9vrfr9r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment