{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/r9vrfr9r/", "data": {"id": "r9vrfr9r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/r9vrfr9r/", "kind": "word", "headword": "திருச்சிற்றம்பலக் கோவையார்", "romanization": "tirucciṟṟampalak kōvaiyār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:59.473459+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது திருக்கோவையார் என்றும் கூறப்படும். இதன் அருமை பெருமை அறிந்தே இதற்கு ஆர் விகுதி கொடுத்தும், திரு என்ற அடையாளம் கொடுத்தும் திருக்கோவையார் என்று குறித்துள்ளார். தமிழில் பல கோவை நூல்கள் இருப்பினும் அவற்றையெல்லாம் அக்கோவை யார் மீது பாடப்பட்டதோ, அன்றி எத்தலத்தின் மீது பாடப்பட்டதோ, அப்பாட்டுடைத் தலைவன் பெயரையும் தலத்தின் பெயரையும் சார்த்தி வழங்குவர். ஆனால், எந்தவிதமான அடைமொழியும் இன்றிக் கோவை என்ற அளவில் இத் திருக்கோவையாரைத்தான் உணர்த்தும். பாவை பாடின வாயால் கோவை பாடுக என்று மணிவாசகரை நடராஜ பெருமான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இது பாடப்பட்ட நூலாயின் இதன் மாண்பைக் கூறவும் முடியுமோ?", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 508"}]}}