முரண் மூளை நோய்
muraṇ mūḷai nōy
பொருள்கள் · Senses
1.
எண்ணம், உணர்வு, செயல் ஆகியவற்றில் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது அழிவுறுத்தும் கொடிய நோய். இதன் அறிகுறிகள் 20 வயதுகளில் தோன்றும். எனினும், இதற்கான வித்து கரு வளர்ச்சியின்போதே இடப்பட்டுவிடுகிறது. அப்போது தான் நரம்பு உயிரணுக்கள் வளர்ந்து, கிளை விட்டு, ஒன்றோடொன்று இணைகின்றன. மூளை முதலில் உருப்பெறும்போது, சில நரம்பணுக்கள், தவறான இடங் களில் குடியேறி, மூளையில் நிரந்தரமான அல்லது தவறான இணைப்புகளுடைய சிறுசிறு பகுதிகளை உண்டாக்குகின்றன. கருவுற்றிருக்கும்போது தாயை ஒரு நோய்க்கிருமி பீடித்தால், இந்தத் தவறான இணைப்புகள் முதிர்ச்சியடைந்து விடுகின்றன. உணர்ச்சியின்மை, அறிவு மழுங்கல், மருட்சிகள், அகக்குரல்கள் கேட்டல் போன்ற நோய்க்குறி கள் முக்கியமாகத் தோன்றுகின்றன. இந்த நோய்க்குறிகள் அவை நோயாளியின் வாழ்நாள் முழுவதும் கூடுவதும் குறைவதுமாக இருக்கும். கருவளர்ச்சியின் இரண்டாம் மும்மாதப் பருவத்தின்போது, நரம்பு உள் தகட்டின் மூலமாக மூளை உயிரணுக்கள் இடம்பெயர்வது முழுமையாக நடைபெறுகிறது. இது ஒரளவுக்கு மரபுவழி நோயாகும்
— schizophrenia
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kzg2qtkm/
தமிழ்“முரண் மூளை நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzg2qtkm/APA
Oliyon Research. (2026). முரண் மூளை நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kzg2qtkm/MLA
"முரண் மூளை நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kzg2qtkm/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment