ஆவிட் (கி.மு.43-கி. பி. 17) அழகான நடைக்கும். இசைமிகுந்த செய்யுளுக்கும் பேர்போன ரோமானியக் கவிஞர். ஆங்கில இலக்கியம் அவரிடம் கற்றுக்கொண்- டதுபோல் வேறு எந்த ரோமானியக் கவிஞரிடமும் கற்றுக் கொள்ளவில்லை. அவர் ஆதன்ஸில் கல்வி கற்றார். முதலில் ரோமானியச் சக்கரவர்த்தியின் ஆதரவு பெற்றபோதிலும், காதற்கலை என்னும் காவியம் எழுதியதற்காக நாடுகடத்தப்பட்டார். அவருடைய கவிதைகள் பெரும்பாலும் காதற்சுவை பற்றியனவே.