அவிநயனார் கலாவியல்
avinayaṉār kalāviyal
அவிநயனார் கலாவியல் என்பது அவிநயனாரால் எழுதப்பெற்ற பாட்டியல் நூலாகும்.
அவிநயனார் கலாவியல் என்பது அவிநயனாரால் எழுதப்பெற்ற பாட்டியல் நூலாகும். இந்நூலையும், அவிநயம் என்னும் இவக்கண நூலையும் எழுதியவர் இவரே. அவிநயனாரால் எழுதப்பட்ட பாட்டியல் நூலே, அவிநயனார் கலாவியல் எனக் கொண்டு நவநீதப்பாட்டியல் உரையாசிரியரால் மேற்கோளாகக் காட்டப் பெற்றது.
அவிநயனார் கலாவியல் நூற்பாக்களாக, இரு நூற்பாக்கள், நவநீதப்பாட்டியல் உரையில் மேற்கோளாக இடம்பெற்றுள்ளன. அவற்றுள் ஒன்று, வாதில் வெல்லும் நெறி பற்றியது; மற்றொன்று அவையில் புகும் நெறி பற்றியது.
வாதில் வெல்லும் நெறி, அளவயில் புகும் நெறி பற்றிய இரு நூற்பாக்களும், பொதுவாகப் பாட்டிலியல் இடம் பெறுபவை. அவையில் பெறும் வெற்றி–தோல்வி பற்றிக் குறிப்பிடும் “நல்லவைக் கண்ணும்” (96) எனத்தொடங்கும் கலித்துறையின் பின்னே, இந்நூற்பாக்கள் நவநீதப்பாட்டியல் உரையில் இடம் பெற்றிருப்பதும், ‘பாட்டியல்’ ‘கலாவியல்’ என்பன ஒரு பொருளன என்பதைக் காட்டும்.
இவையன்றி, அவிநயனார் பாட்டியலில், பாலன், மீளி, மறவன், திறலன், காளை, விடலை, முதுமகன் ஆகிய ஏழு பருவ ஆடவர்க்குரிய அகவை பின்வருமாறு வகுக்கப்பட்டுள்ளது. பாலன் – 7 வயது வரை; மீளி – 10 வயது வரை; மறவன் – 14 வயது வரை; திறலன் – 15 வயது வரை; காளை – 16 வயது வரை; விடலை – 30 வயது வரை; முதுமகன் – 30 வயதிற்கு மேல்.
பேதை முதல் பேரிளம் பெண் ஈறாக ஏழு பருவங்கள், பெண்டிருக்கு வகுக்கப்பட்டாற் போல, ஆடவர்க்கும் மேற்கண்டவாறு வகுக்கப்பட்டமை அவிநயனார் பாட்டியலால் புலனாகிறது.க.ப.அ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 905)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gvygbbhe/
தமிழ்“அவிநயனார் கலாவியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gvygbbhe/APA
Oliyon Research. (2026). அவிநயனார் கலாவியல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gvygbbhe/MLA
"அவிநயனார் கலாவியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/gvygbbhe/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment