முனை

muṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுனி — tip, Warfront
மூலம் · source: தமிழ் விக்சனரி (முனை)
2.
போர்முனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முனை)
3.
விண்சண்டை, பகை, பகைப்புலம, தவம், யுத்தம், முகம், போர்க்களம் முற்படுதல், வெறுத்தல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 345)
4.
போர் முனை, (குறள் 749).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 189)
5.
1. சிறிய மின்காந்த வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகத்தில் தரவுகளை அழிக்கவும், பதிவு களைப் படிக்கவும் பயன்படும் உறுப்பு. காந்தத் தட்டில் தரவுகளைப் படிக்கவும், எழுதவும், அழிக்கவும் பயன்படுவது. 2. ஒரு பட்டியலின் ஆரம்பத்தை அடை யாளம் காட்டும் சிறப்புத் தரவு — head
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தலைமுனை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 686)
6.
ஒரு கட்டிடம் அமைந்துள்ள அல்லது ஒரு கட்டிடம் கட்டப்படவிருக்கிற எல்லை வரையறுக்கப்பட்டுள்ள இடம் — site
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 565)
7.
விளிம்பு ஒரு வெட்டுக் கருவியின் கழுத்து அல்லது பிடிக்குள்ளாக செருகப்படும் பகுதி — Tang
8.
மின்சுற்றுப் புள்ளி. இதனுடன் கடத்தி ஒன்றை இணைக்கலாம். 2. முனையம்: பல கட்டடங்கள் தொகுதியாகக் கருவியமைப்புகளுடன் உள்ள இடம் — terminal
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 433)
9.
பக்கக் கோடுகளும் கடைக் கோடுகளும் சந்திக்கின்ற இடம் தான் முனை என்று அழைக்கப்படுகிறது. தடுக்கும் குழுவினர் தவறிழைக்கிற பொழுது தாக்கும் குழுவினர் ஆட்டத்தினை மீண்டும் தொடங்க, முன் அடி அடிக்கின்ற வாய்ப்பை எதிர் குழுவினருக்கு நடுவர் வழங்க இந்த முறையில் பந்தை வைத்து அடித்தாட ஆட்டம் தொடங்கும். — Corner
கலைச்சொல் · Technical வளைகோல் பந்தாட்டம் மூலம் · source: விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி — எஸ். நவராஜ் செல்லையா (பக். 127)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gur4fsxr/

தமிழ்
“முனை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gur4fsxr/
APA
Oliyon Research. (2026). முனை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/gur4fsxr/
MLA
"முனை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gur4fsxr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment