மகாராட்டிர மாநிலத்தில் அவுரங்காபாத்திலிருந்து வடக்காக 72 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்; வரலாற்றுப் புகழ்பெற்றது. கி.பி. 1803–ஆம் ஆண்டு செப்டம்பர் 23–ஆம் நாள் ஆர்தர் வெல்லெசுலிப் பிரபு அசே (Assaye) என்ற இடத்தில் சிந்தியா, பான்சலே ஆகிய மகாராட்டிர அரசர்களின் கூட்டுச் சேனையைத் தோற்கடித்து வெற்றி கண்டார்.