இருபா இருபஃது

irupā irupaḵtu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று. வெண்பாவும், ஆசிரியப்பாவும், ஒன்றன்பின் ஒன்று தனித்தனி அமைய 20 பாடல்கள் தொடர்ந்து பாடப்பட்டிருத்தலின், இப்பெயர் பெற்றது. இது திருத்துறையூர் அருள் நந்தி சிவாசாரியரால் பாடப்பட்டது. இது தமக்குச் சித்தாந்த அறிவினைத் தெளிவு படுத்திய ஆசிரியர் மெய்கண்டாரை முன்னிலைப் படுத்தி வினவுதலும், அவ் வினாவுக்கு அவர் விடை கூறுதலும் ஆனமுறையில் அமைந்து காணப்படுவது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இதற்குத் திருவாவடுதுறைமடத்து நமச்சிவாயத் தம்பிரான் உரை எழுதியுள்ளார்.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 462)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e9bbvkqg/

தமிழ்
“இருபா இருபஃது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9bbvkqg/
APA
Oliyon Research. (2026). இருபா இருபஃது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e9bbvkqg/
MLA
"இருபா இருபஃது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e9bbvkqg/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment