{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e9bbvkqg/", "data": {"id": "e9bbvkqg", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e9bbvkqg/", "kind": "word", "headword": "இருபா இருபஃது", "romanization": "irupā irupaḵtu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:52:56.721236+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சைவ சித்தாந்த சாத்திரம் பதினான்கினுள் ஒன்று. வெண்பாவும், ஆசிரியப்பாவும், ஒன்றன்பின் ஒன்று தனித்தனி அமைய 20 பாடல்கள் தொடர்ந்து பாடப்பட்டிருத்தலின், இப்பெயர் பெற்றது. இது திருத்துறையூர் அருள் நந்தி சிவாசாரியரால் பாடப்பட்டது. இது தமக்குச் சித்தாந்த அறிவினைத் தெளிவு படுத்திய ஆசிரியர் மெய்கண்டாரை முன்னிலைப் படுத்தி வினவுதலும், அவ் வினாவுக்கு அவர் விடை கூறுதலும் ஆனமுறையில் அமைந்து காணப்படுவது. காலம் 13-ஆம் நூற்றாண்டு. இதற்குத் திருவாவடுதுறைமடத்து நமச்சிவாயத் தம்பிரான் உரை எழுதியுள்ளார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 462"}]}}