அவத் பிகாரி
avat pikāri
புரட்சித் தியாகிகளுள் ஒருவர்.
புரட்சித் தியாகிகளுள் ஒருவர். கி.பி. 1889–ஆம் ஆண்டு தில்லியில் பிறந்தார். தலைசிறந்த புரட்சிவாதி, உத்தரப்பிரதேசத்திலும் பஞ்சாபிலும் புரட்சி நடவடிக்கைகளை அமைத்தவர் இவர். இராசு பிகாரிபோசின் துணைவர்களுள் ஒருவரான அவத் பிகாரி, (Avadh Behari) 1912–ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 23–ஆம் நாள் ஆங்கில அரசாங்கத்தின் இந்திய அரசப் பிரதிநிதியான ஆர்டிஞ்சு பிரபு (Lord Hardinge) வைக்கொல்ல நடைபெற்ற சதியில் பங்கு பெற்றவர். இதைத் தில்லிச் சதி வழக்கு எனக் கூறுவர். ஆர்டிஞ்சு பிரபு தில்லிச் சாந்தினிச் சதுக்கத்தில் அரசு மரியாதைகளுடன் ஊர்வலமாகச் செல்லும்போது அவரைக் கொல்லச் சதி நடந்தது. 1913–ஆம் ஆண்டு மே மாதம் 17–ஆம் நாள் நடைபெற்ற இலாகூர்ச் சதிவழக்கிலும் இவருக்குத் தொடர்பிருந்தது. 1914–ஆம் ஆண்டு பிப்பிரவரியில் இவர் கைது செய்யப்பெற்று, அமிர்சந்து, பால்மோகானந்து, வசந்த குமார் பிசுவாசு என்னும் மூன்று துணைவர்களுடன் விசாரிக்கப் பெற்றார். மரண தண்டனை விதிக்கப்பெற்று 1915–ஆம் ஆண்டு மே மாதம் 11–ஆம் நாள் அம்பாலா மத்திய சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 892)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e6tjyfvb/
தமிழ்“அவத் பிகாரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e6tjyfvb/APA
Oliyon Research. (2026). அவத் பிகாரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e6tjyfvb/MLA
"அவத் பிகாரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/e6tjyfvb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment