ஆசிரியத்துறை ஆசிரியப்பாவின் இனம். நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவு நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வரு- வனவும் ஆசிரியத்துறைகள். சீர் வரையறையின்றி எனைத்துச் சீரானும் அடியானும் வரும். ஓரடி சீர்குறைந்துவரின் ஆசிரிய நேர்த்துறையென்பர். ஈரடி சீர் குறைந்துவரின் ஆசிரிய இணைக்குறள்துறை யென்பர்.