{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bec8nrpy", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bec8nrpy/", "kind": "article", "headword": "ஆசிரியத்துறை", "romanization": "āciriyattuṟai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:24.589823+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆசிரியத்துறை ஆசிரியப்பாவின் இனம்.", "body_ta": "ஆசிரியத்துறை ஆசிரியப்பாவின் இனம். நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயலடி குறைந்து இடைமடக்காய் வருவனவு நான்கடியாய் இடையிடை குறைந்து வருவனவும், நான்கடியாய் இடையிடை குறைந்து இடைமடக்காய் வரு- வனவும் ஆசிரியத்துறைகள். சீர் வரையறையின்றி எனைத்துச் சீரானும் அடியானும் வரும். ஓரடி சீர்குறைந்துவரின் ஆசிரிய நேர்த்துறையென்பர். ஈரடி சீர் குறைந்துவரின் ஆசிரிய இணைக்குறள்துறை யென்பர்."}}