தோற்றம்

tōṟṟam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தோன்றுதல், காட்சி, எண்ணம், வலி, பிறப்பு, உயர்ச்சி, மேன்மை, பொலிவு, தன்மை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 238)
2.
பை, முட்டை , நிலம், வியர்வை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 425)
3.
சரம், அசரம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 425)
4.
உயர்வு, (குறள் 124); தவ வேடம், (குறள் 272); பிறப்பு, (குறள் 1003); புகழ், (குறள் 1059).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 151)
5.
:1) உண்டாதல், மலர்தல் இது கருத்தாவால் உண்டாவது, 2)சரம் அசரம் என இருவகை. 3)முட்டையிற் பிறப்பன, பையில் பிறப்பன (சராயுசம்) வேர்வையில் பிறப்பன (சுவேதசம்) மேற்பிளந்து பிறப்பன (உற்பிச்சம்).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 172)
6.
1. எதுவும் தோன்றும் மூலம் 2. எதனையும் உண்டாக்கும் செயல். — genesis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வளர்முறை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 491)
7.
மனதில் உருவம் கற்பித்துக் காணுதல் — image
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மனக்காட்சி, உள உரு, வடிவமைவு, படிவம், வடிவமைபு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 568)
8.
பிறப்பு, தோன்றல், உண்டாதல், தார்வினின் சிறப்பினங்கள் தோற்றம் சிறந்த நூல். 2. தோற்றுவாய்: தசை இணையும் இடம். தசையின் ஒரு முனை நிலையான எலும்புடன் பிணைக்கப்பட்டிருக்கும் இடம். தசையின் மற்றொரு முனை அசையும் எலும்போடு இணைந்திருக்கும். இதற்கு இணைவாய் (இன்சர்ஷன்) என்று பெயர் — origin - 1
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 306)
9.
ஒரு சேமிப்புப் பகுதியின் தொடக்கத்தைக் குறிக்கும் தனி முகவரி — Origin
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 172)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4hcyrmnf/

தமிழ்
“தோற்றம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4hcyrmnf/
APA
Oliyon Research. (2026). தோற்றம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/4hcyrmnf/
MLA
"தோற்றம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4hcyrmnf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment