அசுணம்
acuṇam
இசையை அறிவதொருவிலங்கென்பர் (அசுண நன்மா - பெருங்கதை : 47:241).
இசையை அறிவதொருவிலங்கென்பர் (அசுண நன்மா - பெருங்கதை : 47:241). யாழொலியைக் கேட்டு மகிழ்தலும் பறையொலியைக் கேட்டுத் துன்புறுதலும் அசுணத்திற் கியல்பு என்பர். (பெருங்:47:241-43). இதன் இயல்பைக்கலி:143, நான்மணி:4, சீவக:1402, கம்பராமாயணம்-அவையடக்கம் முதலியவற்றிற் காண்க. தலைவன் பிரிவைப் பொறாத தலைவியின் நிலைக்கு அசுணம் பறையொலிகேட்டு வருந்தும் நிலையை உவமை காட்டுவார் (பெருங்:47:241--45). சூடாமணி நிகண்டு இதனைக் கேகயம் என்றும் கூறும் (சூடா:விலங்கின்:54). இதனைப் பறவையென்பாரும் உளர். இதன் உருவம் நிறம் முதலியவை தெரியவில்லை.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 69)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zv2ve63r/
தமிழ்“அசுணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zv2ve63r/APA
Oliyon Research. (2026). அசுணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zv2ve63r/MLA
"அசுணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zv2ve63r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment