{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zv2ve63r/", "data": {"id": "zv2ve63r", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zv2ve63r/", "kind": "article", "headword": "அசுணம்", "romanization": "acuṇam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:17.889279+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இசையை அறிவதொருவிலங்கென்பர் (அசுண நன்மா - பெருங்கதை : 47:241).", "body_ta": "இசையை அறிவதொருவிலங்கென்பர் (அசுண நன்மா - பெருங்கதை : 47:241). யாழொலியைக் கேட்டு மகிழ்தலும் பறையொலியைக் கேட்டுத் துன்புறுதலும் அசுணத்திற் கியல்பு என்பர். (பெருங்:47:241-43). இதன் இயல்பைக்கலி:143, நான்மணி:4, சீவக:1402, கம்பராமாயணம்-அவையடக்கம் முதலியவற்றிற் காண்க. தலைவன் பிரிவைப் பொறாத தலைவியின் நிலைக்கு அசுணம் பறையொலிகேட்டு வருந்தும் நிலையை உவமை காட்டுவார் (பெருங்:47:241--45). சூடாமணி நிகண்டு இதனைக் கேகயம் என்றும் கூறும் (சூடா:விலங்கின்:54). இதனைப் பறவையென்பாரும் உளர். இதன் உருவம் நிறம் முதலியவை தெரியவில்லை."}}