அட்டாவதானம்
aṭṭāvatāṉam
அட்டாவதானம் என்பது ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு வகையான அறிவுச் செயல்களில் தம் கவனத்தைச் செலுத்தி அவற்றில் ஈடுபடும் ஆற்றலைக் குறிக்கும்.
அட்டாவதானம் என்பது ஒருவர் ஒரே நேரத்தில் எட்டு வகையான அறிவுச் செயல்களில் தம் கவனத்தைச் செலுத்தி அவற்றில் ஈடுபடும் ஆற்றலைக் குறிக்கும். இலாட சங்கிலி இணைத்தல், இரண்டொருவர் வினாவும் வினாக்களுக்கு விடையளித்தல், சொக்கட்டான் விளையாடுதல், முதுகிலிட்ட பரற்கற்களை எண்ணுதல், சதுரங்கமாடுதல், கொடுத்த குறிப்பிற்கேற்பப் புதிய செய்யுளியற்றல், கண்ட பத்திரிகை கணிதம் கூறுதல், குதிரையடி கூறுதல் போன்ற செயல்களில் ஒரே நேரத்தில் ஈடுபடுவது இக்கலையாகும். இவ்வாற்றல் வாய்க்கப் பெற்றோர் அட்டாவதானி எனச் சிறப்பிக்கப் பெற்றனர். இக்கலையில் எண்வகை ஆற்றலுக்கு மேலாகப் பத்து, பதினாறு வகை ஆற்றல்களைப் பெற்று விளங்கினோரும் இருந்துள்ளனர். திருக்குறள் புலமையில் இவ்வாறு எண் வகை நினைவாற்றலைப் பெருக்கி விளங்குபவரும் உள்ளனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 218)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zppzuxrj/
தமிழ்“அட்டாவதானம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zppzuxrj/APA
Oliyon Research. (2026). அட்டாவதானம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zppzuxrj/MLA
"அட்டாவதானம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zppzuxrj/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment