ஒளிவிலகு கோணம்

oḷivilaku kōṇam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான கோட்டிற்குமிடையிலான கோணம் ஒளிவிலகு கோணம் எனப்படும் angle of repose, Or angle of friction :(எந்) குவிநிலைக் கோணம் அல்லது உராய்வுக் கோணம் : ஒரு சமதள மேற்பரப்பு தொடு வானுடன் கொண்டுள்ள கோணம். இந்தக் கோணத்தில், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒரு பொருள் சரியத் தொடங்கும். அந்தத் தொடர்பில் வைக்கப்பட்டுள்ள பொருள்களின் தன்மைக்கேற்ப இந்தக் கோணம் மாறுபடுகிறது angle post : நடுத்தூண் சுழற்படிக்கட்டின் நடுத்தூண் angle post :(க.க.) கோண ஆதாரக்கோல் : ஒரு படிக்கட்டின் கோணத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சுழற்படிக்கட்டு ஆதாரக்கால் angle of roll ;(வானூ) சுழற்சிக் கோணம் : ஒரு விமானத்தின் பக்க அச்சினை அதன் கிடைமட்டத் தளமாகக் கொண்டு வருவதற்கு அதன் நீள்கோட்டு அச்சினைச் சுற்றிச் சுழற்றப்பட வேண்டிய கூர்ங்கோணம். இது, ஒருபுறச் சாய்வுக் கோணம்' என்று அழைக்கப்படும் angle of stabilizer setting : (வானூ.) விமானச் சமநிலையமைவுக் கோணம் : ஒரு விமானத்தின் உந்துவிசைக் கோட்டிற்கும் சம நிலையமைவு நாண் வரைக்குமிடையிலான கூர்ங்கோணம் angle of thread ; , (எந்) திருகிழைக் கோணம் : ஓர் ஊடச்சு சமதளத்தில் அளவிடப்படும் திருகிழையின் பக்கங்களுக்கிடையிலான கோணம் angle of wing setting: (வானூ) இறகு அமைப்புக் கோணம் :இறகு நாண் வரையின் சமதளத்திற்கும், உந்துவிசைக் கோட்டிற்குமிடையிலான கூர்ங்கோணம்.ஒவ்வொரு இறகிற்கும் இந்தக் கோணம் வேறுபடலாம் angle of yaw : (வானூ) விமான வழி விலகீட்டுக் கோணம் : காற்று வீசும் திசைக்கும், விமானத்தின் செவ்வொழுங்குச் சமதளத்திற்குமிடையிலான கூர்ங்கோணம். விமானம் வலப்புறம் திரும்பியிருக்கும் போது இக்கோணம் நேர் எண்ணாக இருக்கும் angle plate : (எந்) கோணத் தகடு : பொதுவாக எந்திரங்களை அமைக்கும் பணிக்குப் பயன்படுவது வார்ப்பிரும்பினாலானது ; ஒன்றுக்கொன்று நேர் கோணங்களில் அமைந்த இரு உலோகத் தகடுகளினால் அமைந்து, மரையாணிகளுக்காகத் துளைகளைக் கொண்டிருப்பது angstrom unit. (இயற்) ஆங்ஸ்டிராம் அலகு : ஒளி அலைகளின் நீளத்தை அளந்து மதிப்பிடுவதற்குரிய நுண்ணளவைக் கூறு. ஒரு கோடி ஆங்ஸ்டிராம் என்பது ஒரு மீட்டருக்குச் சமம் angular cutter : (எந்) கோண வடிவு வெட்டுக்கருவி : துளைவெட்டுங் கருவி. இதில் வெட்டு முகம், வெட்டுக் கருவியின் அச்சிலிருந்து ஒரு கோணத்தில் இருக்கும் angular diameter: கோண விட்டம் : ஒரு வட்டமான பொருளின் வடிவளவு, (1) அதன் உள்ளபடியான விட்டம், (2) கண்ணிலிருந்து அதன் தொலைவு ஆகிய இரண்டையும் பொறுத்ததாகும் ஒரு பொருள் எந்தக் கோணத்தில் கண்ணில்படுகிறதோ அந்தக் கோணத்தின் விட்டம் ஆகும். கண்ணிலிருந்து ஓரடி தூரத்திலுள்ள ஒரு வட்டத்தின் கோணவிட்டம் 5° மட்டுமே. நிலவின் கோண விட்டம் 1/2° angular gears : (எந்) கோண வடிவப்பல்லிணைகள் : நேர் கோணம் அல்லாத வேறு கோணங்களில் இயங்குவதற்கென வடிவமைக்கப்பட்ட சரிவுப் பல்லிணைகள் angular momentum : கோண இயக்கு விசை: திரும்புகிற ஒரு பொருளின் இயக்குவிசை. இரண்டு பொருள்கள் ஒரே சமயத்தில் சம ஆற்றல்களின் மூலம் நிலைக்குக் கொண்டு வரப்படுமானால் அவை சமமான கோண இயக்குவிசை உடையவையாகும் angular phase : (மின்) கோணப் படிநிலை: ஓர் ஆதாரக் கோட்டினைப் பொறுத்து ஒரு சுழல் நேறியம் அமைந்திருக்கும் நிலை angular velocity: (மின்) கோண வேக வீதம் : ஒரு வினாடியில் ஒரு சுழல் நேறியத்தின் வேகம், இது ரேடியன்களில் குறிக்கப்படும் angular velocity : (எந்) கோண வடிவ வேக வீதம் : ஒரு மையத்தை ஆதாரமாகக் கொண்டு சுழலும் ஒரு பொருளினால் அல்லது புள்ளியினால் ஒரு வினாடி நேரத்தில் வரையப்படும் வளைவரைக்கும் ஆரத்திற்குமிடையிலான விகிதம் anhidrotics : (உட) வியர்வைத் தணிப்பிகள் anhydride : (வேதி)நீர் நீக்கிய காடி: ஒரு கூட்டுப்பொருளிலிருந்து நீரை அகற்றி விடும்போது எஞ்சி நிற்கும் பொருள். HSO一HO=SO anhydrous : (வேதி) நீரில்லாத : நீர் நீக்கப்பட்ட உலர்ந்தது; வற்றி வதங்கியது anhydrous ammonia : (வேதி) நீரற்ற அம்மோனியா/நவச்சார ஆவி: குளிராலும், அழுத்தமூட்டுதலாலும் திரவமாக்கப்பட்டுத் தூய்மைப்படுத்தப்பட்ட அம்மோனியா வாயு (நவச்சார ஆவி) amiline : (வேதி.) அனிலைன்: நிறமற்ற, எண்ணெய்ப் பிசுக்கான கூட்டுப்பொருள் (CHNH) பல்வேறு கீல் எண்ணெய்ச் சாயப் பொருட்கள் இதனை ஆதாரமாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ரப்பர் தொழிலுக்கு இது பயன்படுகிறது anion : (மின்.) எதிர்மின்மம்: மின் பகுப்பாய்வில், நேர் மின்முனையை நோக்கி நகர்கிற ஓர் எதிர் இயனி (மின்மயத்தூள்) aniridia :(உட.) விழிச் சுருக்குத் தசையின்மை anischuria : (உட) சிறுநீரை அடக்க இயலாவண்ணம் கட்டற்ற முறையில் ஒழுகிக் கொண்டிருப்பது anisotropic : (மின்) திசை மாறு பாட்டுப் பண்பு: ஒரு பொருள் வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு இயல்புகளைக் கொண்டிருத்தல். எடுத்துக்காட்டாக, திசைமாறு பாட்டுப் பண்புடைய ஒரு படிகம், செங்குத்துக் கோணத்திசையை விட இன்னொரு திசையில் மின்விசை பாய்வதை அதிக அளவில் தடையுடையதாக இருக்கும் ankylourethria : (உட) சிறுநீர் வடிகுழாய் அடைப்பு அல்லது சிறுநீர் வடிகுழாய் குறுகியிருப்பது anneal : (உலோ.) கடும்பதமாக்கல் : கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆறவைத்தல் மூலமோ நன்கு சூடாக்கி மெல்ல ஆறவிடுவதன் மூலமோ கடும்பதப்படுத்துதல் annealed tubing : (உலோ) பதப்படுத்திய குழாய் அமைப்பு : உலோகக் குழாய்கள், பகுதி பதப்படுத்தியும் வாணிக முறையில் வழங்கப்படுகின்றன. இந்தக் குழாய்களை வளைக்க வேண்டியிருக்கும் போது, முற்றிலும் பதப்படுத்திய குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன annealing : (உலோ) பதனாற்றல்: கண்ணாடி, உலோகங்கள் முதலியவற்றைக் கட்டுப்படுத்தி ஆற வைப்பதன் மூலமாகவோ, மென்மையாக்கி உடையாதபடி பதப்படுத்துதல் annual ring : (தாவர) ஆண்டு வளைய வரை :வெட்டு மரத்தில் மரத்தின் ஆண்டு வளர்ச்சியைக் குறிக்கும் வளைய வரை annelida : (உயி..) வளையக்கணு உடலி : மண்புழுக்கள் போன்று, வளையங்களாலான உடல்களைக் கொண்ட பிராணிகள் annular ball bearing : (எந்) வளையக் குண்டு வாங்கி: ஒரு வளையம் போன்ற பிடிப்பானில் குண்டுகளைத் தாங்கியுள்ள ஒரு தாங்கி annulareclipse : (இயற்) வளையக் கிரகணம்:சூரியனைச் சந்திரன் முழுவதுமாக மறைக்காமல் சந்திரனைச் சுற்றி ஓர் ஒளிவளையம் மட்டுமே தெரியும் கிரகணம் annular vault : (க.க) வளையக் கவிகை மாடம் : உருளை வடிவக் கவிகை மாடம் போன்று இணையான இரு சுவர்களை ஆதாரமாகக் கொண்டு எழுகின்ற ஒரு கவிகை மாடம் annular wheel : (பல்) வளையச் சக்கரம்: இது ஒரு வளையப் பல்லிணை, இதன் பற்கள் அதன் உட்புறப் பரிதியுடன் பிணைக்கப்பட்டி ருக்கும். இதனை உட்புறப் பல்லிணை என்றும் கூறுவர் annulated columns : (க.க) வளையமிட்ட தூண்கள் : வளையங்களால் அல்லது இணைப்புத் தகடுகளால் ஒன்றாகப் பிணைக்கப் பட்ட தூண் வரிசைக் கட்டமைவு annulat : (க.க.) குறுவளையம் : மற்றவற்றைப் பிரிப்பதற்குப் பயன்படும் ஒரு சதுரவடிவ வார்ப்படம் annulus: (உயி..) வளை வடிவ அமைப்பு:குறிமறையினத் தாவரத்தில் சிதல் உறைவிரிய உதவும் வளைய வடிவமான உயிர்மத் தொகுதி, ஒரே மையத்தைக் கொண்ட இரு வளையங்களுக்கிடையேயான இடைவெளி annunciator: (மின்) ஏவல் மணிப் பொறி : ஒளி, ஒலி வாயிலாகப் பணிநாடிய இடம் சுட்டிக்காட்டுவதற்கான ஏவல் மணியின் பொறி அமைப்பு annuuciator wire: (மின்) ஏவல் மணிப்பொறிக் கம்பி : மென்மையான செப்புக் கம்பி. இதில் இரு அடுக்குப் பஞ்சு நூல் எதிர்த் திசைகளில் சுற்றப்பட்டு, மென்மெழுகு பூசப்பட்டிருக்கும் anode : (மின்.) நேர் மின்வாய் : எதிர்மின் வாய்க்கு எதிரானது காற்று நீக்கப்பட்ட வெற்றுக் குழாயில் மின்னோட்டம் புகும் நேர்மின்னோடி — angle of refraction
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 43)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zjja68mp/

தமிழ்
“ஒளிவிலகு கோணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjja68mp/
APA
Oliyon Research. (2026). ஒளிவிலகு கோணம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zjja68mp/
MLA
"ஒளிவிலகு கோணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zjja68mp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment