நோய் நுண்ணுயிரிக் கடத்திகள்
nōy nuṇṇuyirik kaṭattikaḷ
நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து மற்ற விலங்குகளுக்கு, நோயினைக் கடத்தும் உயிரினங்கள், நோய் நுண்ணுயிரிக் கடத்திகள் என்பனவாகும்.
நோயினால் பாதிக்கப்பட்ட விலங்குகளிலிருந்து மற்ற விலங்குகளுக்கு, நோயினைக் கடத்தும் உயிரினங்கள், நோய் நுண்ணுயிரிக் கடத்திகள் என்பனவாகும். நோய் நுண்ணுயிரிக் கடத்திகள், நோயை மறைமுகமாகப் பரப்பும் வழி வகைளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இனப் பெருக்கம் அடையாத வகையில் அமைந்திருப்பதே ஒரு பிரிவாகவும், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் இனப் பெருக்கம் அதன் வாழ்க்கைச் சுற்றின் ஒரு பகுதியினை நிறைவு செய்யும் வகையில் அமைந்திருப்பது மற்றொரு பிரிவாகவும் கொள்ளப் படும். நோய்க் கடத்திகளில் ஏற்படும் நிலையினை மூவகையாகப் பிரிக்கலாம்.
வளர்ச்சியடையும் வகையில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரியின் வளர்ச்சி நிலையில் ஒரு பகுதி, நோய் கடத்தியில் இனப் பெருக்கம் அடைந்து, பின்னரே பரவுகிறது. மூன்றாம் வகையில் மேற்கூறிய இரு பிரிவுகளும் நடைபெறுகின்றன. முதல் நிலையில், நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள், நோய்க் கடத்திகளில் இங்குமங்கும் செல்கின்றன. சான்றாக, ஆப்பிரிக்கா டிரபனோசோமியாசிஸ் எனப் படும் நோயினை உண்டாக்கும் ஒட்டுண்ணி, கிளாஸீனா வகைப் பூச்சிகளாகப் பூச்சிகளின் வயிற்றில் சென்று பின்பு, உமிழ் நீர்ச் சுரப்பிகளின் வழியே வெளியேற்றப் பட்டு, நோயினைப் பரப்புகிறது.
சில கடத்திகளில் உட்கொள்ளப்பட்ட நுண்ணுயிரிகள் மலக்கழிவின் மூலமாக வெளியே தள்ளப் பட்டு, நோயினைப் பரப்புகின்றன. சில வகை நோய்களுக்கும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட வகைக் கடத்தியே காரணமாக உள்ளது. சான்றாக, மலேரியா நோயைப் பரப்ப,பிளாஸ்மோடியம் வகைக் கொசுக்களே நோய்க் கடத்திகளாக விளங்குகின்றன.
பெரும்பான்மையான நோய்க் கடத்திகள் ஈ, கொசு, உண்ணி போன்ற ஒட்டுண்ணிகளாக உள்ளமையால், அவை பரப்பும் நோய்களின் அளவும் எண்ணிக்கையினைக் கொண்டு மாறுபடும். காட்டாக, மழைக் காலத்திற்குப் பிறகு, கொசுக்கள் மிகுதியும் பெருகும் நிலையில் அவை பரப்பும் நோய்களும் மிகுந்து காணப் படும்.
நோய்க் கடத்திகளின் பல்வேறு உறுப்புகள் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. சில நுண்ணுயிரிகள்,நோய்க் கடத்திகளின் உமிழ் நீர்ச் சுரப்பிகளில் இனப் பெருக்கம் செய்கின்றன. காட்டாக, யானைக் கால் ஏற்படுத்தும் ஒட்டுண்ணி நோய், கடத்தியின் வாய்ப் பகுதியில் மிகுந்து காணப் படுகிறது. நோய்க் கடத்திகளால், நோய்கள் பரவும் போது, கடத்திகளைக் கட்டுப் படுத்துவது நோயினைக் கட்டுப் படுத்தப் பெரிதும் உதவும். பூச்சி கொல்லிகளைப் பயன் படுத்தி, நோய்க் கடத்திகளைக் கட்டுப் படுத்துவது ஒரு முறையாகும். ஆனால், நோய்க் கடத்திகள் இவ்வகை நோய்க் கொல்லிகளுக்கு எதிராக, எதிர்ப்புத் தன்மைகளைச் சில நேரம் அடைவதன் மூலம், நோய் கட்டுக்கடங்காமல் பரவுவதற்கும் வாய்ப்புள்ளது. (D.D.T, B.H.C.) போன்ற பூச்சிக் கொல்லிகளைப் பயன் படுத்திச் செட்ஸ் எனப் படும் ஈயினை, ஆப்பிரிக்கா நாட்டின் சில பகுதிகளில் கட்டுப் படுத்தினர். கால்நடைகளில் பல ஒட்டுண்ணி நோய்கள், குறிப்பாகத் தைலேரியானிஸ்,பெபீசியாவுளிஸ் போன்றவை வெளிப்புற ஒட்டுண்ணிகள் மூலம், ஒரு கால்நடையிலிருந்து மற்றொரு கால்நடைக்குக் கடத்தப் படுகின்றன.
விலங்கியல் முறையில் நுண்ணுயிர்க் கடத்திகளைக் கட்டுப் படுத்துதல். பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப் பொருள்களினால் சுற்றுப்புறக் கேடு ஏற்படுவதால்,தற்போது உயிரியல் முறைகள் பெருத்த அளவில் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இம்முறைகளில், நோய்க் கடத்திகளின் இயற்கை எதிரிகளைத் தெரிந்தெடுத்து, அவற்றினைப் பயன் படுத்தி, நோய்க் கடத்தியினை அழிக்கலாம்.
மலேரியா நோய்ப் பரப்பும் அனாபிலிஸ் வகைக் கொசுக்களைக் கட்டுப்படுத்தச் சில வகை மீன்கள் மிகுதியும் பயன் படுத்தப் பட்டு வந்தன. தற்போது, இவ்வகைக் கொசுக்களின் இளநிலைப் பருவத்தினைக் கட்டுப் படுத்தப் பேசில்லஸ் சீரியஸ் எனப் படும் நுண்ணுயிரி பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இது உற்பத்தி செய்யும் புரதம், கொசுக்களின் இளநிலையினைத் தாக்கி அழிக்க வல்லது. இப்பொருள் தற்போது தொழில் நுட்ப முறையில் மிகுதியாகத் தயாரிக்கப் பட்டு, மலேரியா பரப்பும் கொசுக்களையும், தாவரங்களில் நோய் பரப்பும் பூச்சிகளையும் அழிக்கப் பெரிதும் பயன் படுத்தப் பட்டு வருகிறது. —புருஷோத்தமன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 14, பக். 341)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zfvybqsu/
தமிழ்“நோய் நுண்ணுயிரிக் கடத்திகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zfvybqsu/APA
Oliyon Research. (2026). நோய் நுண்ணுயிரிக் கடத்திகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zfvybqsu/MLA
"நோய் நுண்ணுயிரிக் கடத்திகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zfvybqsu/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment