அரிட்டைன் மட்கலன்
ariṭṭaiṉ maṭkalaṉ
அரிட்டைன் மட்கலன் என்பது மத்திய தரைக்கடல் நாடுகளில் பயன்படுத்தப்பட்ட ஒருவகை மட்கலனைக் குறிக்கும்.
அரிட்டைன் மட்கலன் என்பது மத்திய தரைக்கடல் நாடுகளில் பயன்படுத்தப்பட்ட ஒருவகை மட்கலனைக் குறிக்கும். முதன்முதலில் இத்தாலி நாட்டில் ‘அரிட்டியம்’ (Arretium) என்ற இடத்தில் செய்யப்பட்டதால் அவ்வூரின் பெயரைக் கொண்டே அரிட்டைன் மட்கலன் (Arretine ware) என அழைக்கப்படுகிறது. ‘அரிட்டியம்’ எனும் ஊர் இக்காலத்தில் ‘அரிசோ’ (Arezzo) எனப்படுகிறது. அரிட்டைன் மட்கலன் இளஞ்சிவப்பும் பளபளப்பும் கொண்ட மெல்லிய மட்கலனாகும். சில மட்கலன்கள் அரக்கு நிறத்திலும் சில மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்திலும் காணப்படும். இம்மட்கலன்கள் வட்டில்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை இத்தாலியில் கி.பி. 50–ஆம் ஆண்டிற்குப் பின்னர் உண்டாக்கப்படவில்லை. இவை ‘அரிட்டியத்தில்’ மட்டுமன்றி இத்தாலியிலுள்ள புட்டோலி, மொடியா, இரெமினி ஆகிய பிற பகுதிகளிலும் வனையப்பட்டன. இம்மட்கலனின் உடைந்த பகுதிகள், தமிழகத்தில் பாண்டிச்சேரிக்கு அருகிலுள்ள அரிக்கமேடு எனும் இடத்தில் அகழ்வாய்வின்போது கிடைத்துள்ளன. இவை கி.பி. 50 வரையுள்ள காலக் கட்டத்தைச் சார்ந்தனை. அரிட்டைன் மட்கலத் துண்டுகள் இங்குக் கிடைத்திருப்பதன் வாயிலாகத் தமிழகம் மிகப் பழங்காலத்திலிருந்தே உரோமானிய (இத்தாலி) நாடுகளுடன் கடல் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதை அறியலாம்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 784)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zfmawwaf/
தமிழ்“அரிட்டைன் மட்கலன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zfmawwaf/APA
Oliyon Research. (2026). அரிட்டைன் மட்கலன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zfmawwaf/MLA
"அரிட்டைன் மட்கலன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/zfmawwaf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment