அட்ட மூர்த்தம் என்பது சிவபெருமான் உருவினனாக விளங்கும் நிலையைக் குறிக்கும். எண்வகை நிலையாவன நிலம், நீர், தீ, வளி, வான், ஞாயிறு, திங்கள், இயமானன் ஆகிய எட்டும் ஆம். இதனால், சிவபெருமான் அட்டமூர்த்தி என்றும் குறிக்கப்படுவார்.