உடுப்பி
uṭuppi
கருநாடக மாநிலம் தென் கன்னட மாவட்டத்தில் உள்ளதொரு நகரம்.
கருநாடக மாநிலம் தென் கன்னட மாவட்டத்தில் உள்ளதொரு நகரம். இவ்வூர் உடுப்பி என்னும் வட்டத்தின் மையமுமாகும். உடுப்பி (Udupi) கிருட்டிணன் கோயிலால் சிறப்புப் பெற்றுள்ளது. குழந்தை வடிவில் காட்சியளிக்கும் இத்திருவுருவம் கிருட்டிண வழிபாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஈர்ப்பதாகும். இத்திருக்கோயிலை கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் மத்துவாச்சாரியார் நிறுவினார் என்று கருதுகிறார்கள். எட்டு மத்துவ மடங்களைச் சார்ந்த ஆசாரியர்கள் இரண்டாண்டுக்கொருமுறை மாறி மாறி இக்கோயிலின் பொறுப்பேற்று வழிபாடு நடத்துகிறார்கள். அவற்றுள் ஒரு மடத்தினைப் பேசாவர் (Pejawar) மடம் என்பர். இம்மடத் தலைவர்கள் வைதிக ஆசாரத்திற்குப் பெயர்பெற்றவர். இங்கு 1965–ஆம் ஆண்டில் நடைபெற்ற விசுவ இந்து பரிசத்து மாநாட்டில் கூடிய மடாதிபதிகள் தீண்டாமை இந்து சமயத்திற்குப் புறம்பானது என்று தீர்மானம் நிறைவேற்றினர். உடுப்பியின் மக்கள்தொகை 33,398 (1981).
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 818)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z3gyw7u4/
தமிழ்“உடுப்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z3gyw7u4/APA
Oliyon Research. (2026). உடுப்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z3gyw7u4/MLA
"உடுப்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/z3gyw7u4/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment