{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z3gyw7u4/", "data": {"id": "z3gyw7u4", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z3gyw7u4/", "kind": "article", "headword": "உடுப்பி", "romanization": "uṭuppi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:49.999092+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "கருநாடக மாநிலம் தென் கன்னட மாவட்டத்தில் உள்ளதொரு நகரம்.", "body_ta": "கருநாடக மாநிலம் தென் கன்னட மாவட்டத்தில் உள்ளதொரு நகரம். இவ்வூர் உடுப்பி என்னும் வட்டத்தின் மையமுமாகும். உடுப்பி (Udupi) கிருட்டிணன் கோயிலால் சிறப்புப் பெற்றுள்ளது. குழந்தை வடிவில் காட்சியளிக்கும் இத்திருவுருவம் கிருட்டிண வழிபாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் ஈர்ப்பதாகும். இத்திருக்கோயிலை கி.பி. 13–ஆம் நூற்றாண்டில் மத்துவாச்சாரியார் நிறுவினார் என்று கருதுகிறார்கள். எட்டு மத்துவ மடங்களைச் சார்ந்த ஆசாரியர்கள் இரண்டாண்டுக்கொருமுறை மாறி மாறி இக்கோயிலின் பொறுப்பேற்று வழிபாடு நடத்துகிறார்கள். அவற்றுள் ஒரு மடத்தினைப் பேசாவர் (Pejawar) மடம் என்பர். இம்மடத் தலைவர்கள் வைதிக ஆசாரத்திற்குப் பெயர்பெற்றவர். இங்கு 1965–ஆம் ஆண்டில் நடைபெற்ற விசுவ இந்து பரிசத்து மாநாட்டில் கூடிய மடாதிபதிகள் தீண்டாமை இந்து சமயத்திற்குப் புறம்பானது என்று தீர்மானம் நிறைவேற்றினர். உடுப்பியின் மக்கள்தொகை 33,398 (1981)."}}