இலியோனிதாசு
iliyōṉitācu
என்பார் பண்டைய இசுபார்ட்டா என்னும் கிரேக்க நாட்டின் அரசர்.
என்பார் பண்டைய இசுபார்ட்டா என்னும் கிரேக்க நாட்டின் அரசர். பாரசீகப் பேரரசர் முதலாம் செர்சீசு (Xerxes I ) கி.பி. 480–ஆம் ஆண்டில் கிரேக்க நாட்டின் மீது படையெடுத்தபோது, தெர்மோபைலே (Thermo pylae) என்னுமிடத்தில் குறுகலான கணவாய் ஒன்றின் வழியாக, மையக் கிரேக்க நாட்டை நோக்கிப் பின்வாங்கிய கிரேக்கர்களின் மூலப்படையைத் துரத்திச் சென்றார். அங்கு இவர் எதிர்பாராத தடை ஒன்று இருக்கக் கண்டார். கணவாயை வழிமறித்து 300 இசுபார்ட்டாவின் படைவீரர்கள் வரும் இடரினைக்கண்டு அஞ்சாதவராய் அமைதியாகப் பாரசீகப் படையின் வருகையை எதிர்நோக்கியிருந்தார். இசுபார்ட்டா (Sparta) வீரர்களுக்குத் தலைமை தாங்கியவர் இலியோனிதாசு என்னும் பெயர் கொண்ட அரசராவர். தம் படையைச் சார்ந்த முன்னணிப் படை வீரர்களை உடனே எதிர்த்துத் தாக்கும்படி பாரசீகப் பேரரசர் முதலாம் செர்சீசு ஆணையிட்டார். இதன் விளைவாகக் கடும் போர் மூண்டது. அலை அலையாகப் பாரசீகப்படை வீரர்கள் அனுப்பப்பட்டனர். உறுதி குலையாது இசுபார்ட்டாவின் வீரர்கள் அவர்களைக் கொன்று குவிந்தனர். பொழுது சாயும் சமயம் இலியோனிதாசும் அவர்தம் படைவீரர்களும் கொல்லப்பட்டனர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 422)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/yuhhmjhp/
தமிழ்“இலியோனிதாசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yuhhmjhp/APA
Oliyon Research. (2026). இலியோனிதாசு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/yuhhmjhp/MLA
"இலியோனிதாசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/yuhhmjhp/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment