இலின்பியாவோ
iliṉpiyāvō
சீனாவின் பாதுகாப்பு அமைச்சராக 1959 முதல் 1971 வரை பதவி வகித்தவர்.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சராக 1959 முதல் 1971 வரை பதவி வகித்தவர். மாசேதுங்கை அடுத்துச் சீனப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக இலின்பியாவோ (Lin Piao) வரக்கூடியவர் என்று பல அரசியல் வல்லுநர்கள் நம்பினார்கள். ஆனால், இவர் 1971–ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். வானவூர்தி நொறுங்கி விழுந்து மங்கோலியாவில், 1971–ஆம் ஆண்டில் இவர் இறந்துவிட்டார் என்னும் செய்தியைச் சீனா 1972–இல் வெளியிட்டது. மாசேதுங்கைக் கொன்றுவிட்டு, அரசைக் கவிழ்க்க இவர் முயற்சி செய்து தோல்வியுற்றார் என்றும், பின்னர் உயிர் தப்பச் சீனாவை விட்டுச் செல்ல முயன்றபோது இவர் விமான விபத்தில் உயிர் துறந்தார் என்றும் கூறப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சராக இருந்தபோது மக்கள் விடுதலைப் படையின் தலைவராக இலின் பணியாற்றினார். மாசேதுங்கை ஆதரிக்கும் செங்காவலர்களின் தலைவராகவும் இவர் சிறிதுகாலம் செயலாற்றினார்.
இலின், உப்பே (Hupeh) என்னும் மாநிலத்தில் 1907 – இல் பிறந்தார். இவர் வாம்போ (Whampao) படைக்கழகத்தில் சியாங்கேசேக் (ChiangKai–Shek) கின் கீழ் மாணவராக இருந்தார். பட்டப்படிப்பை முடித்த பின்னர், மாசேதுங்கின் பொதுவுடைமைப் படையில் சேர்ந்தார். இவர் சீனாவின் மீது படையெடுத்து வந்த சப்பானியப் படைகளைத் தோற்கடித்துப் பெற்ற வெற்றிகள் குறிப்பிடத்தக்கவை. இது 1930–ஆம் ஆண்டளவில் நிகழ்ந்தது. சீனாவின் உள்நாட்டுப் போரின்போது, தேசிய சீனப் படைகளை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டவர் இவர் என்றும் கூறுவர். இவர் 1971–இல் மங்கோலியாவில் காலமானார்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 425)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypj3gpqf/
தமிழ்“இலின்பியாவோ”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ypj3gpqf/APA
Oliyon Research. (2026). இலின்பியாவோ. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ypj3gpqf/MLA
"இலின்பியாவோ." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ypj3gpqf/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment