இலாடப் பேரரையன்
ilāṭap pēraraiyaṉ
இலாடர் குலத் தலைவன்; முதலாம் இராசராசப் பெருமன்னனின் குறுநில மன்னன், இவன் வீரசோழன் இலாடப் பேரரையன் எனக் குறிக்கப்பெறுகிறான்.
இலாடர் குலத் தலைவன்; முதலாம் இராசராசப் பெருமன்னனின் குறுநில மன்னன், இவன் வீரசோழன் இலாடப் பேரரையன் எனக் குறிக்கப்பெறுகிறான்.
தொண்டை மண்டலத்தில் படுவூர்க் கோட்டத்தில் உள்ள பெருந்திமிரி (இக்காலத்திய ஆர்க்காட்டுப் பகுதி) நாட்டை ஆண்டு வந்த அரசக் குடியினர் இலாடர் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகின்றனர். பராந்தக சோழன் ஆட்சிக்கால முதலே இலாடர் சோழ மரபினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.
வீரசோழன் இலாடப் பேரரையன் இலாடராசன் புகழ்விப்பவர் கண்டன் என்பானின் மகனாவான். முதலாம் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில் இலாடப் பேரரசன் தன் அரசியாரின் வேண்டுகோளுக்கு இணங்கச் சில வரிகள் மூலம் வரும் பொருளைச் சமணப் பள்ளிக்கு வழங்கினான்.
இராசராசனின் மனைவியருள் ஒருத்தியான இலாடமாதேவி என்பாள் இலாடர் மரபினள் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 365)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ygx3p4xw/
தமிழ்“இலாடப் பேரரையன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ygx3p4xw/APA
Oliyon Research. (2026). இலாடப் பேரரையன். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ygx3p4xw/MLA
"இலாடப் பேரரையன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/ygx3p4xw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment