{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ygx3p4xw/", "data": {"id": "ygx3p4xw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ygx3p4xw/", "kind": "article", "headword": "இலாடப் பேரரையன்", "romanization": "ilāṭap pēraraiyaṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-26T12:58:44.416977+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "இலாடர் குலத் தலைவன்; முதலாம் இராசராசப் பெருமன்னனின் குறுநில மன்னன், இவன் வீரசோழன் இலாடப் பேரரையன் எனக் குறிக்கப்பெறுகிறான்.", "body_ta": "இலாடர் குலத் தலைவன்; முதலாம் இராசராசப் பெருமன்னனின் குறுநில மன்னன், இவன் வீரசோழன் இலாடப் பேரரையன் எனக் குறிக்கப்பெறுகிறான்.\n\nதொண்டை மண்டலத்தில் படுவூர்க் கோட்டத்தில் உள்ள பெருந்திமிரி (இக்காலத்திய ஆர்க்காட்டுப் பகுதி) நாட்டை ஆண்டு வந்த அரசக் குடியினர் இலாடர் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெறுகின்றனர். பராந்தக சோழன் ஆட்சிக்கால முதலே இலாடர் சோழ மரபினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.\n\nவீரசோழன் இலாடப் பேரரையன் இலாடராசன் புகழ்விப்பவர் கண்டன் என்பானின் மகனாவான். முதலாம் இராசராசனின் எட்டாம் ஆட்சியாண்டில் இலாடப் பேரரசன் தன் அரசியாரின் வேண்டுகோளுக்கு இணங்கச் சில வரிகள் மூலம் வரும் பொருளைச் சமணப் பள்ளிக்கு வழங்கினான்.\n\nஇராசராசனின் மனைவியருள் ஒருத்தியான இலாடமாதேவி என்பாள் இலாடர் மரபினள் என்பது குறிப்பிடத்தக்கது."}}