இறக்க விதி
iṟakka viti
இசுலாமியச் சட்டத்தில் ஒருவர் உயில் எழுதி வைக்காமல் இறந்துவிடும் போது அவர் சொத்துக்கள் இசுலாமிய வாரிசுரிமைச் சட்டப்படி வாரிசுகள், பங்குதாரர்கள், எஞ்சியவர்கள், தூரத்து உறவினர்கள் ஆகியோரைச் சென்றடையும்.
இசுலாமியச் சட்டத்தில் ஒருவர் உயில் எழுதி வைக்காமல் இறந்துவிடும் போது அவர் சொத்துக்கள் இசுலாமிய வாரிசுரிமைச் சட்டப்படி வாரிசுகள், பங்குதாரர்கள், எஞ்சியவர்கள், தூரத்து உறவினர்கள் ஆகியோரைச் சென்றடையும். பங்குதாரர்கட்குக் குறிப்பிட்ட பங்கு போக எஞ்சியுள்ளது எஞ்சியவர்களுக்குக் கொடுக்கப்படும். எஞ்சியவர்கள் இல்லாதபோது எஞ்சியுள்ளது மூன்றாம் வகுப்பினரான தூரத்து உறவினருக்குச் செல்லாமல் பங்குதாரருக்கு அவரது பங்கின் விகிதப்படி பிரித்துக் கொடுக்கப்படும். இவ்வாறு எஞ்சியுள்ளது பங்குதாரரையே மீண்டும் வந்தடைவது இறக்க விதிக் கொள்கை (Doctrine of Return) எனப்படுகிறது. இதனை மீட்டளிப்புக் கொள்கை எனவும் கூறலாம்.
இசுலாமியச் சுன்னிப் பிரிவுச் சட்டப்படி இறக்க விதிக்கும் ஒரு விதிவிலக்கு உண்டு. அதன்படி கணவன் அல்லது மனைவிக்கு மீட்டளிப்பில் பங்கு கிடையாது. காரணம், அவர்கள் திருமணத்தினால் உறவினர்கள்; அவர்களையன்றி ஏனைய பங்குதாரரும் இறக்கவிதியில் பங்கு கொள்வர்.
எடுத்துக்காட்டு
1. ஒரு முசுலிம் பெண் தன் கணவன், மகள் இருவரையும் விட்டு விட்டு இறக்கும் போது பங்கு விகிதம் அடியிற்கண்டவாறு அமையும்.
:கணவன் = 1/4 பங்கு
மகள் = 1/2, மிஞ்சிய 1/4 பங்கும் சேர்த்து = 3/4 பங்கு
2. ஒரு முசுலிம் ஆண் தன் விதவை, உடன்பிறந்தாள் இருவரையும் விட்டு விட்டு இறந்து விடும் போது அவர்களின் பங்கு விகிதம் அடியிற் கண்டவாறு அமையும்.
:விதவை = 1/4 பங்கு
:உடன் பிறந்தாள் = 1/2
:மிஞ்சிய 1/4 பங்கும் சேர்த்து = 3/4 பங்கு
3. ஒரு முசுலிம் தன் தந்தை, தாய், மகள் மூவரையும் விட்டுவிட்டு இறந்து விடும்போது, அவர்களின் பங்கு விகிதம் அடியிற்கண்டவாறு அமையும்.
சியாச் சட்டப்படி இறக்கவிதிக்கு மூன்று விதி விலக்குகள் உண்டு. அவை: 1. கணவன் அல்லது விதவை மீட்டளிப்பில் பங்கு பெற மாட்டார்கள். 2. தந்தை, மகள் ஆகியோரோடு இரு உடன் பிறந்த சகோதரர்கள் அல்லது ஒரு சகோதரன், இரு சகோதரிகள் அல்லது நான்கு சகோதரிகள் இருந்தால், தாய் மீட்டளிப்பில் பங்கு பெற மாட்டாள். 3. உடன் பிறந்த சகோதரியிருந்தால் தாய்வழிச் சகோதர சகோதரிகட்கு மீட்டளிப்பில் பங்கு கிடையாது. இ.ப.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 504)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y9v6msf2/
தமிழ்“இறக்க விதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y9v6msf2/APA
Oliyon Research. (2026). இறக்க விதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y9v6msf2/MLA
"இறக்க விதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y9v6msf2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment