இயைபுப்படுத்தல்

iyaipuppaṭuttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடர்புப்படுத்தல். ஒவ்வாத பலவற்றை இயைபுப் படுத்தல் இயைபுப் புறச்செய்வது சைவ சித்தாந்தம். இதற்குரிய விளக் கம்பின்வருமாறு: 1.சாங்கியர் போலச் சற்காரிய வாதத்தை ஏற்கிறது. ஆனால், அவர்கள் இறையிலிக் கொள்கையை விடுகிறது. 2.நையாயிகர்களைப்போல இறைவன் உண்டு எனக்கொள்கிறது ஆனால், அவர்களுடைய அசற்காரிய வாதத்தை விடுகிறது. 3. நையாயிகர்களைப் போல அன்யதாக்கியாதியை ஏற் கிறது.ஆனால்,அவர்களுடைய பரதப் பிராமானியக் கொள்கையை விடுகிறது. 4. மீமாம்சர்களைப்போலஸ்வதப் பிராமாண்யத்தை ஏற்கிறது. ஆனால், அவர்களின் இறை யிலிக்கொள்கையை விடுகிறது. 5. அத்துவைதிகளைப் போலச் சீவன் முத்தியை ஏற்கிறது. ஆனால், அவர்களின் நிர்க் குணப்பிரம-மாயாவாதத்தை விடுகிறது. 6. விசிட்டாத்துவைதிகளைப் போல், இறைவனை எண்ணில் பலகுணம் உடையவனாகக் கொள்கிறது. ஆனால், அவர் களின் சீவமுத்தி மறுப்பை விடுகிறது. - இவ்வாறு எல்லாக்கருத்துகளையும் கொள்கைகளையும் ஏதோ எவ்வாறு என்று குவித் துக்கலவையாக்காமல், சைவ சித்தாந்தம் தன்னுடைய அடிப் படைக்கோட்பாட்டிற்கேற்ப, அவற்றை இயைபுப்படுத்தி, வேண்டியவற்றை எடுத்துக் கொள்வது அதன் உலகளாவிய தன்மையையே காட்டுகிறது.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 58)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y8zxznq6/

தமிழ்
“இயைபுப்படுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8zxznq6/
APA
Oliyon Research. (2026). இயைபுப்படுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y8zxznq6/
MLA
"இயைபுப்படுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/y8zxznq6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment