இளங்கீரனார்
iḷaṅkīraṉār
சங்கப் புலவர்களுள் ஒருவர்.
சங்கப் புலவர்களுள் ஒருவர். இளங்கீரனார், எயினந்தை மகன் இளங்கீரனார், பொருந்தில் இளங்கீரனார் ஆகிய மூன்று பெயர்கள் சங்கப் பாடல்களில் காணப்படுகின்றன. இம்மூவரும் ஒருவரா வெவ்வேறானவரா என்பது புலப்படவில்லை. எனினும், இம்மூவர் பெயரிலும் சுட்டப்படும் பெரும்பாலான அகம் தழுவிய பாடல்கள், ‘தலைமகன் தன் நெஞ்சுக்குச் சொல்லும்’ துறைப் பாடல்களாகவே அமைந்திருத்தலைக் கொண்டு, மூவரும் ஒருவரே எனத் துணியலாம். மூவரும் வெவ்வேறானவர் என்னும் கருத்தும் உண்டு. ‘எயினன்’ என்பது வேட்டுவர் சாதியைக் குறிக்கும் சொல்லாகவும் ‘பொருந்தில்’ என்பது ஊரைக் குறிக்கும் சொல்லாகவும் புலவரின் பெயரோடு சேர்ந்து இடம் பெற்றிருக்கலாம். அகநானூற்றில் பதினொன்றும் (3, 19, 225, 239, 289, 299, 351, 361, 371, 395, 399) புறநானூற்றில் ஒன்றும் (53), குறுந்தொகையில் ஒன்றும் (116), நற்றிணையில் ஆறுமாக (3, 62, 113, 269, 308, 346) மொத்தம் 19 பாடல்கள் இளங்கீரனார் பெயரில் காணப்படுகின்றன. இவற்றுள் அகநானூற்றின் 19, 351 ஆகிய பாடல்கள் பொருந்தில் இளங்கீரனார் என்னும் பெயரிலும், 361–ஆம் பாடல் எயினந்தை மகனார் இளங்கீரனார் என்னும் பெயரிலும் காணப்படுகின்றன. இக்கால இலக்கிய உரையாடல்களில் மிகுதியாகக் கையாளப்பெறும் ‘விரிப்பின் அகலும்; தொகுப்- பின் எஞ்சும்’ (புறம். 53:6) என்ற நயமுள்ள தொடரையும் கவிதைத் திட்பத்தை உணர்த்தும் ‘செறுத்த செய்யுள்’ (புறம். 53:11) என்ற தொடரையும் ஆக்கிய புலவர் இளங்கீரனார் ஆவர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 463)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y7x2feek/
தமிழ்“இளங்கீரனார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y7x2feek/APA
Oliyon Research. (2026). இளங்கீரனார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y7x2feek/MLA
"இளங்கீரனார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y7x2feek/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment