இருமொழி அகராதி
irumoḻi akarāti
இருமொழி அகராதி என்பது ஒரு மொழியிலுள்ள சொற்கள் பிறிதொரு மொழிச் சொற்களால் விளக்கம் பெறும் வகையில் இரண்டு மொழிகள் இடம் பெறும் அகராதி (Bilingual Dictionary) யாகும்.
இருமொழி அகராதி என்பது ஒரு மொழியிலுள்ள சொற்கள் பிறிதொரு மொழிச் சொற்களால் விளக்கம் பெறும் வகையில் இரண்டு மொழிகள் இடம் பெறும் அகராதி (Bilingual Dictionary) யாகும். பொதுவாக இருமொழி அகராதி, பிறமொழி- யினையும் (Other Tongue) அம்மொழி நூல்களையும் புரிந்துகொள்ளும் வகையில் அமையும், இவ்வகராதியில், அகரவரிசைப்படுத்தப்பெற்று அமையும் சொற்கள் எந்த மொழியில் அமைகின்றனவோ அந்த மொழி அடிப்படை மொழி (Source Language) எனப்படும். அகராதியில் இடம்பெறும் சொற்களுக்கு இணைச்சொற்கள் (Equivalent Words) அல்லது விளக்கங்கள் கொடுக்கப் பயன்படுத்தப்படும் மொழி இலக்குமொழி (Target Language) எனப்படும்.
இருமொழி அகராதிகள் இருமொழியினருக்குப் பயன்படும் வகையிலும், அடிப்படை மொழியினர் அல்லது இலக்கு மொழியினருக்குப் பயன்படும் வகையிலும் அமையும். இருமொழியினருக்கும் ஒரே சீராகப் பயன்படும் வகையில் இருமொழி அகராதி அமைதல் இல்லை.
படிப்பவர் (Reader), நோக்கம் (Purpose) ஆகிய இரண்டின் அடிப்படையில் இருமொழி அகாரதிகளை இருவகைப்படுத்தல் இயலும், முதல்வகை இருமொழி அகராதி, அடிப்படைமொழி பேசுவோருக்கு இலக்கு மொழிச் சொற்கள் பயன்படும் முறையினை விளக்கும் வகையில் அமையும். இரண்டாம் வகை அகாரதி, இலக்குமொழி பேசுவோர்க்கு அடிப்படை மொழியினைப் புரிந்துகொள்வதற்கும், அம்மொழி நூல்களை விளங்கிக் கொள்வதற்கும், மொழி பெயர்ப்பதற்கும் பயன்படும் வகையில் அமையும்.
இருமொழி அகராதி எளிய மக்கள், அறிஞர்கள், மாணவர்கள் போன்றோரின் பயன்பாட்டிற்கேற்ப அமையும், மேலும், இருமொழி அகராதி அதன் தன்மையினைப் பொறுத்து, சொற்பிறப்பு வரலாற்று அகராதியாகவோ (Etymological Dictionary) வரலாற்று அகராதியாகவோ (Historical Dictionary) கிளைமொழி அகராதியாகவோ (Dialect Dictionary) அமையும்.
எந்த மொழியினருக்குத் தேவையோ அந்த மொழியினரின் தேவைக்கேற்பப் படிப்போர் வழிகாட்டியும் (Readers guide) முன்னுரையும் (Introduction) இருமொழி அகராதியில் இடம்பெறும். மொழிபெயர்ப்பிற்குப் பயன்படும் இருமொழி அகராதியில் சொற்கள் மிகவும் குறைவாகக் காணப்பெறும். இத்தகைய அகராதி பார்வைக்குப் (Reference) பயன்படுவதால் நிகழ்காலச் சொற்களையும் உள்ளடக்கியதாக அமைதல் நல்லது. முழுமையான இணைச் சொற்கள் பொருளாக அல்லது விளக்கமாகக் கொடுக்கப் பெறும் நிலையில்தான் இருமொழி அகராதி சிறப்பாக அமையும். ஏ.ஆ.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 237)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y4dggx7d/
தமிழ்“இருமொழி அகராதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y4dggx7d/APA
Oliyon Research. (2026). இருமொழி அகராதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y4dggx7d/MLA
"இருமொழி அகராதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/y4dggx7d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment