புதிய அரசியல் அமைப்பில் ஆட்சி செய்யும் பொறுப்போடு ஏனைய துறைகளின் முன்னேற்றத்திற்கும் அவற்றின் வளர்ச்சிக்குமுரிய திட்டங்களில் ஈடுபடுவது அரசிற்கு, ஓர் இன்றியமையாத் தேவையாக மாறியுள்ளது. இத்திட்டங்களின் சீரான செயல் முறைக்கும் அவற்றின் வெற்றிக்கும் அரசாங்கம் கையாளும் பொருளாதாரக் கோட்பாடுகளே (Economic Principles) காரணமாகின்றன. உற்பத்திக் காரணி இட ஒதுக்கீடு ஒருவர் ஒரு பேனாவைப் பயன்படுத்தும்போது, மற்றவர்களுக்கு அந்தப் பேனா அதே நேரத்தில் பயன்படுவதில்லை. அதாவது, தனியார் பொருள்கள் ஒன்றுக்கொன்று போட்டித் தொடர்பு கொண்டவை (Rival Relationship). ஆனால், பொதுப் பொருள்கள் (Public Utilities) ஒருவர் பயன்படுத்தும்போது மற்றவர்களும் பயன்படுத்தக் கூடியவை. பொதுச்சாலையில் ஒருவர் நடக்கும்போது மற்றவர்களும் நடக்கலாம். அங்காடியில் போட்டித் தொடர்பு கொண்ட தனிப் பொருள்களை விற்றலும் வாங்கலும் செய்யலாம். ஆனால், பொதுப்பொருள் விற்பனையை அங்காடி முறையாகச் செய்ய இயலாது. இதுதான் அங்காடித் தோல்வி (Market Failure) எனப்படும். அங்காடித் தோல்வி காரணமாக அரசாங்கமே பொதுப் பொருள்களை உற்பத்தி செய்து பகிர்ந்தளிக்கிறது. இதுமட்டுமன்றிப் பல காரணங்களுக்காகத் தனியார் பயன்படுத்தும் பொருள்களான மின்சாரம், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றையும் அரசே உற்பத்தி செய்கிறது. எனவே, அரசு பொதுப் பொருள்கள் உற்பத்தி, பகிர்ந்தளித்தல் ஆகியவற்றிற்காகவும், சில குறிப்பிட்ட தனியார் பொருள் உற்பத்திக்காகவும் நிலம், உழைப்பு, முதல் போன்ற உற்பத்திக் காரணிகளை ஒதுக்கீடு (Allocation) செய்ய வேண்டியிருக்கிறது. பங்கீட்டுப் பணி தனியார் சொத்துரிமை காரணமாகவும், அங்காடியின் விலை வரையறையில் முற்றுரிமையாளரின் முழுச் செல்வாக்குக் காரணமாகவும் தனியார் வருவாய்களில் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன. ஏதோ ஓர் அடிப்படையில், இந்த ஏற்றத் தாழ்வுகள் நியாயமற்றவை என்று சமுதாயம் கருதும்போது, அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தித் திட்டங்கள், சட்டங்கள், வரிகள் ஆகியவற்றின் மூலம் வருமானப் பகிர்வைச் சமுதாயம் நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் பங்கீட்டுப் பணி (Distribution Function) ஆற்றுகிறது. உறுதிநிலைப்படுத்தல் பணி பொருளாதார இயக்கத்தின்போது வேலையில்லாத் திண்டாட்டம், விலை உயர்வு, அயற் செலாவணிப் பற்றாக்குறை போன்ற பற்பல இடர்ப்பாடுகள் தோன்றக் கூடும். வணிகச் சுழல்கள் (Trade Cycles) காரணமாக மந்தங்களும் மிக்க வேகத்துடன் இயங்கி மாறி மாறி வரக் கூடும். இவற்றைத் தடுத்துப் பொருளாதார இயக்கத்தை ஒரே சீரான நிலைக்கு உறுதிப்படுத்துவதும் (Stabilisation Function) அரசின் தலையாய பணிகளில் ஒன்றாக உள்ளது. ஒருங்கிணைத்தல் பணி மேலே குறிப்பிட்ட பணிகளை அரசு செயற்படுத்தும்போது, அவை ஒன்றுக்கொன்று எதிரான விளைவுகளை உண்டாக்கலாம். எடுத்துக்காட்டாக, பொதுப் பொருள்களை உற்பத்தி செய்வதற்காக அரசு நிதிக் கொள்கையைப் பயன்படுத்தும்போது, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காகப் பண அளிப்பைக் (Money Supply) குறைக்கலாம். இக்காலங்களில் அரசின் நிதிக் (Fiscal) கொள்கையும் பணக் (Monetary) கொள்கையும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் செயற்படலாம். இதனைத் தவிர்ப்பதற்கு அரசின் பணிகளை நிறைவேற்றும் எல்லாவகைக் கருவிகளும் ஒன்றோடொன்று இசைந்து இணக்கமான ஒருங்கமைந்த முறையில் (Coordination Function) செயற்பட வேண்டும். புதிய கால அரசுகளின் பணிகளைப் பழங்கால அரசுகளின் பணிகளோடு ஒப்பிட்டால், புதிய கால அரசுகள், காவல் அரசுகளிலிருந்து (Police States), நல அரசுகளாக (Welfare States) மாறியிருக்கின்றன. காவல் அரசுகளின் தலையாய பணிகள், வெளிநாட்டுப் படையெடுப்பிலிருந்து பாதுகாத்தல், உள்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் காத்தல், நீதி நிருவாகம் புரிதல், எதிர்பாராத இயற்கை இடையூறுகளின்போது உதவி நல்கல், வெளிநாட்டு வாணிகத்தைக் கட்டுப்படுத்தல், கல்வி, வறுமை நீக்கம் போன்ற சில பொதுத் திட்டங்களில் ஈடுபடுதல் முதலியனவாம். இந்நிலையில் அரசுகள் தனியார் துறையில் தலையிடாக் கொள்கையைக் (Laissez Faire) கடைப்பிடித்தன. ஆனால், புதிய கால அரசுகளோ, நாட்டு மக்களின் நலம் கருதி உற்பத்தி, பங்கீடு, முதலிய பல்வேறு பகுதிகளிலும் தம் பணிகளை விரிவாக்கியுள்ளன. சமூக நலம் பெருக வேண்டுமானால், ஒவ்வொரு தனிப்பட்டவரின் உண்மை வருவாயும் பெருக வேண்டும். இந்த இலக்கை அடைவதற்குப் பொருளாதார முன்னேற்றமும் வளர்ச்சியும் இன்றியமையாதவை. முன்னேற்றம் என்பது, முயற்சி அல்லது பயிற்சி மூலமாக முன்னர் இருந்த நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்குச் செல்லுதல். வளர்ச்சி என்பது, முன்பு உள்ளடங்கியுள்ள ஆற்றல்களை வெளிப்படுவதற்குத் துணையான சூழ்நிலைகளை ஏற்படுத்துதல். மக்களின் உண்மை வருவாய் பெருக வேண்டுமானால், அவர்களிடையே மறைந்து கிடக்கும் ஆற்றல்களைப் பொருளாதார வளர்ச்சி மூலம் வெளிக் கொணர்தல் வேண்டும். அது போலவே, ஊக்குவித்தல் மூலமும் தூண்டுதல் மூலமும் பொருளாதார முன்னேற்றத்தைப் பெறவேண்டும். பொருளாதார முன்னேற்றமும் வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. இக்கால அரசுகளின் திட்டங்களும் வரவு செலவுக் கொள்கையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அடைவதை இலக்காகக் கொண்டுள்ளன. இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள் பொருளாதார வளர்ச்சியைச் சிறந்த குறிக்கோளாகக் கொண்டுள்ளன. அடுத்த பக்கத்தில் உள்ள பட்டியல், இந்தியப் பொருளாதாரத்தின் ஆண்டு வளர்ச்சிப் புள்ளி விவரங்களை விழுக்காடுகளில் காட்டுகிறது. வருவாய் !! !! தனியார் வருவாய் !! !! வேளாண்மை உற்பத்தி !! !!தொழில் உற்பத்தி (1951–56) || || 3.6 || || 1.7 || || 4.3 || || 7.4 (1956-61) || || 4.1 || ||2.0 || || 4.1 || ||6.6 (1961—66) || || 2.4 || || 0.1 || || 1.0 || || 2.0 (1966–69) || || 4.1 || || 1.8 || || 6.9 || || 2.6 (1969–74) || || 3.4 || || 1.1 || || 3.1 || || 3.7 (1974–79) || || 5.4 || || 3.3 || || 4.6 || || 6.2 குறிப்பு: 1979–80க்கும் பின்னர் புள்ளி விவரங்கள் விரைவு மதிப்பீட்டின் (Quick Estimate) அடிப்படையில் தரப்பட்டவை. வாக்னரின் விதி (Wagner's Law) செருமானியப் பொருளியல் அறிஞர் அடால்பு வாக்னார் (Adolph Wagner) 19–ஆம் நூற்றாண்டில் “வளரும் பொதுச் செலவு” விதியைக் கூறினார். வளரும் புதிய எந்திரச் சமுதாயங்களில், சமூக முன்னேற்றத்திற்காகத் தொழில் இயக்கத்தில் சமூகக் கண்ணோட்டத்தின் சிறப்புத்தன்மை மிகுமென்றும், அதன் காரணமாகத் தொடர்ந்து பொதுத்துறையின் வளர்ச்சியும் மிகுமென்றும் அவருடைய விதி கூறுகிறது. உலக வணிக மந்தத்தைத் (1929–33) தொடர்ந்து, சே.எம். கீன்சு பிரபு, முதலீட்டில் சமுதாயத் தலையீடு இன்றியமையாதது என்று வாதிட்டார். அதன் விளைவாக, முழு வேலை வாய்ப்பை ஏற்படுத்துவது அரசுகளின் தலையாய கடமைகளுள் ஒன்று என்பதைத் தத்துவ அடிப்படையில் பெரும்பாலான பொருளியல் அறிஞர்கள் ஏற்றுக்கொண்டனர். மேலும், தலையிடாக் கொள்கை வலுவிழந்து, அரசின் தலையீடு இன்றியமையாதது என்ற கருத்து வலுப்பெற்றது. இதனால், கலப்புப் பொருளாதாரம் (Mixed Economy) விரிவடைந்தது. கலப்புப் பொருளாதாரத்தில் தனியார் துறையும் அரசுத் துறையும் ஒருங்கே இயங்குகின்றன. உருசியா, சீனா போன்ற நாடுகளில் அரசுத்துறையின் பங்கு மிகுதியாகவும், தனியார் துறையின் பங்கு மிகக் குறைவாகவும் காணப்படுகிறது. அமெரிக்க நாட்டில் தனியார் துறையின் பங்கு மிகுதியாகவும், அரசின் பங்கு குறைவாகவும் காணப்படுகிறது. அமெரிக்காவில் தந்தி, தொலைபேசிப் பணிகள், இரயில்வேக்கள் விமானப் போக்குவரத்து, கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதி ஆகியவை தனியார் துறையிலேயே இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் அரசு வெளியிட்டிருக்கும் தொழிற் கொள்கைக்கு ஏற்ப (Indian Industrial policy) அரசு ஈடுபட வேண்டிய பகுதிகள், தனி- யார் துறை ஈடுபட வேண்டிய பகுதிகள் ஆகிய இரண்டுமே, ஈடுபட உரிமை பெற்ற பகுதிகள் என்று வரையறை செய்யப்பட்டுக் கலப்புப் பொருளாதாரம் இயங்குகிறது. எனவே, உலக நாடுகளுள் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், உருசியா, சீனா ஆகியவற்றில் அரசுத்துறை மிகச் செல்வாக்குள்ளதாகவும், மேற்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றில் தனியார் துறை செல்வாக்குள்ளதாகவும், மற்றப் பெரும்பாலான நாடுகளில் இரண்டு துறைகளுமே கலந்து செல்வாக்குள்ளனவாகவும் விளங்குகின்றன. கலப்புப் பொருளாதாரத்தில் தனியார் துறை முழுமையாகவோ சிறப்பாகவோ கொடுக்காத அல்லது கொடுக்க இயலாத பொதுப் பொருள்களின் பொறுப்பை அரசு ஏற்கும். பெரும்பாலும், அத்தகைய பொதுப் பொருள்கள் விற்பனைக்குரியவை அல்ல, எடுத்துக்காட்டு: கலங்கரை விளக்கம். தனியார் நலத்தைவிடப் பள்ளிக் கூடங்கள், சேரி ஒழிப்புப் போன்றவற்றில் பொதுநலம் மிகுதியாக இருப்பதால், தனியார் துறை இவை ஆதாயமற்றதாகக் கருதி, அவற்றில் ஈடுபடாமல் இருக்கும். இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் மிகுந்த செலவு கருதித் தனியார் துறை, அதில் ஈடுபடாமல் இருக்கும். புதிய காடுகள் வளர்த்தல், மண் அரிப்பைத் தடுத்தல், புகையால் வரும் பேரிடரைக் குறைத்தல் போன்றவையும் அரசின் பொறுப்பில் வரும், அங்காடி இயக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும், பொதுமக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளைக் குறைப்பதற்காகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளான காலநிலை அறிவிப்புகள், உணவு, மருந்துகளுக்குத் தரங்கள் வரையறை செய்தல், பண்டங்களின் தரங்களையும் எடைகளையும் வரையறை செய்தல், தரத்தையும் அளவையும் வெளியிடும்படி வணிகர்களைக் கட்டுப்படுத்துதல் போன்றவற்றையும் அரசு மேற்கொண்டு நடத்தும். மேலும் முற்றுரிமை தரக்கூடிய நிறுவனங்களைக் கட்டுப்படுத்துதல், மின்சார உற்பத்தி, சாலைப் போக்குவரத்து போன்றவற்றை அரசுடைமையாக்குதல், அல்லது தனியார் துறையோடு கூட்டாக நிருவகித்தல், தனியார் துறை சிறப்பாகவும் நம்பிக்கையோடும் செய்யத் தவறுகிற அஞ்சல், தந்தி ஆகியவற்றையும் அரசே ஏற்று நடத்துதல், நாட்டின் பாதுகாப்புக் கருதித் தன் கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருக்கும் அணுசக்தி போன்ற துறைகளையும் பிற புதிய நிறுவனங்களையும் நாட்டில் வளரச் செய்தல், பொருளாதார வாழ்க்கையில் ஏற்படும் தேவையற்ற பேரிடரைத் தவிர்ப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளான குறைந்த அளவுக் கூலிச் சட்டங்கள், சமுதாயப் பாதுகாப்புச் (Social Security) சட்டங்கள், ஊக்க ஊதிய விதிகள் (Bonus Laws), பொருளாதார ஆதிக்கம் குவிதலைத் தடுப்பதற்கான முற்றுரிமை எதிர்ப்புச் சட்டங்கள் (Antimonopoly Laws) ஆகியவற்றைக் கலப்புப் பொருளாதார அரசு ஏற்று நடத்த வேண்டும். பொதுநலம் கருதிச் செய்யப்பட வேண்டி மருத்துவ விடுதிகள் அமைத்தல், முழு வேலைவாய்ப்புக் கருதியும் விலைவாசிகளைக் கட்டுப்படுத்தக் கருதியும் நிதி, பணக்கொள்கைகளைப் பயன்படுத்தல், அரசு பின்பற்றும் வரிக்கொள்கைகள், பற்றாக்குறைப் பொருளியல், மைய வங்கி நடவடிக்கைகள், நாட்டின் எல்லாப் பகுதிகளின் முன்னேற்றத்தையும் கருதி அவற்றிடையே ஒரு சமன்பாடு காண மேற்கொள்ளும் வட்டார வளர்ச்சிப் பணிகள் போன்ற நடவடிக்கைகள், தேசத்தின் பாதுகாப்பு, வாணிகம், நட்புக் கருதி மற்ற நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள் ஆகிய யாவற்றையும் கலப்புப் பொருளாதார அரசு தன் பொறுப்பில் எடுத்துச் செயற்படுத்தும். கலப்புப் பொருளாதார அரசின் ஆதிக்கம் மிகுதியாகிக் கொண்டேயிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அரசு பெரும்பாலான பொருளாதாரத் துறைகளில், அவற்றின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் விதிகளை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டு: நிருவாகம், தொழிலாளர்களுக்கிடையே தொடர்புகள், ஏற்றுமதி – இறக்குமதித் தொடர்புகள், மூலப் பொருட் பங்கீடு, உணவுப் பண்டங்களின் பங்கீடு, உற்பத்திக் காரணிகளை அரசு தன் கட்டுக்குள் மிகுந்த அளவில் வைத்திருப்பதாலோ அல்லது முழுமையான அளவில் நாட்டுடைமையாக்கி விட்டதாலோ வருகிற விளைவுகள், அணுசக்தி, மின்சார சக்தி, அஞ்சல், தந்தித் துறைகள், இரயில்வே, விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, தனியார் துறையை உரிமம் வழங்குதல் மூலமாகக் கட்டுப்படுத்தல், விலை வரையறை செய்தலில் அரசு நேரடியான அல்லது மறைமுகமான பங்கு வகித்தல், வேளாண்மைப் பொருள்களின் விலை வரையறை, வெளிநாட்டுச் செலாவணியின் மதிப்பு வரையறை, குறைந்த அளவுக் கூலி வரையறை, அரசின் வழியாகச் செலவிடப்படும் தேசிய வருவாயின் பங்கு மிகுந்துகொண்டே செல்லுதல், இந்தியாவின் தேசிய வருவாயில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்கு அரசு வழியாகச் செலவிடப்படுதல், பொருளாதார அமைப்பின் ஒட்டுமொத்தமான நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல், பணநிதிக் கொள்கைகள், தனியாரின் தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு உதவிகள் அளித்தல் அல்லது தடை செய்தல், கல்விக் கொடைகள், மது விலக்கு, எதிர்பாராத புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்தல், தனியார் முயற்சியைச் சில பகுதிகளில் ஆதரித்துச் சில பகுதிகளில், தடுத்தல், பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலை அமைப்பதற்குக் கொடைகளை அளித்தல், நகர மையங்களில் தொற்சாலைகள் அமைப்பதைக் கட்டுப்படுத்தல், மாநில அரசு நடவடிக்கைகளை மத்திய அரசு தன் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிசெய்தல், உதவித் தொகை வழங்குதல், நிதிப்பங்கீடு செய்தல், அரசுத் துறைகளிலும் படைத் துறைகளிலும் மக்களுக்கு வேலைவாய்ப்பைப் பெருக்குதல் ஆகியவை காரணங்களாம். உலகின் எல்லா நாடுகளிலுமே சில பொதுவான பொருளாதார நோக்கங்கள் காணப்படுகின்றன. அவையாவன 1) முழு வேலைவாய்ப்பைப் பெறுதல், 2) பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் குறைத்தல், 3) விலையில் ஏற்ற இறக்கம் இல்லாமல் சமன்படச் செய்தல். 4) அயற் செலாவணியில் சமன்பாடு பெறுதல் போன்றவை. இந்த இலக்குகளை எய்துவதற்காக எல்லா நாடுகளுமே பொருளாதாரத் திட்டங்களை (Economic Planning) மேற்கொள்கின்றன. ஆனால், இந்தத் திட்டங்கள் அந்தந்த நாட்டின் பொருளாதார அமைப்புக்கும் பொருளாதாரக் கலப்புக்கும் ஏற்றவாறு வேறுபடுகின்றன. எந்தெந்த நாடுகளில் உற்பத்திக் காரணிகள் அரசுக்குச் சொந்தமாக இருக்கின்றனவோ (Ownership of means of Production) அந்த நாடுகளில் மையத் திட்டம் (Centralised Planning) செயற்படுகிறது. எடுத்துக்காட்டாக உருசியாவின் திட்டம், அந்த நாட்டின் உற்பத்திக் காரணிகளின் இயக்கம், பண்டங்களின் உற்பத்தி, அவற்றின் பகிர்வு, தேசிய வருவாயின் பங்கீடு ஆகிய அனைத்தையுமே முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இந்தியா போன்ற நாடுகளில் அரசுத் துறையும் தனியார் துறையும் ஒருங்கிணைந்து செயற்படுவதால், அவற்றின் திட்டங்கள் நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடிவதில்லை. பின்தங்கிய நாடுகளில் பொருளாதாரத்தைப் புதுமைப்படுத்திப் பொருளாதார வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்த அடிப்படைச் சமுதாய மூலதனம் (Social overhead capital) முழுவதையும் அரசுத் துறைதான் செய்ய வேண்டியிருக்கிறது. அதே சமயம் சொத்துரிமையை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதனால், தனியார் துறையும் இயங்கிக் கொண்டிருக்கிறது. எனவே, அவற்றின் திட்டங்கள், பொதுத் துறைப்பகுதி (Public sector section), தனியார்துறைப் பகுதி (Private Sector section) என்னும் இரண்டு பகுதிகளையும் தனித் தனியாகப் பிரித்துக் காட்டுகின்றன. பொதுத்துறைப்பகுதியைப் பொறுத்த அளவில், மத்திய, மாநில அரசுகள் அவற்றை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றன. தனியார் துறைப் பகுதியைப் பொறுத்த அளவில், திட்ட இலக்குகளை எய்துவதற்காக அவற்றில் ஈடுபடுத்தப்படுவதற்காகப் பல்வேறுவகை ஊக்குவிப்புகளையும் (Incentives) கட்டுப்பாடுகளையும் (Regulations) அரசு மேற்கொள்கிறது. அரசுத்துறைப் பகுதித் திட்டமானது வெற்றி பெறுவதும், வெற்றி பெறாமல் போவதும் அரசின் திறமையைச் சார்ந்தே அமையும். ஆனால், தனியார்துறைப் பகுதி வெற்றி பெறுதலும், வெற்றி பெறாமல் போவதும் அரசின் திறனோடு தனியார் துறையின் ஒத்துழைப்பையும் தனியார் துறையின் வாய்ப்புகளையும் சார்ந்தே அமையும். அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளும் ஓரளவு திட்டங்களை வகுக்கின்றன. ஆனால், இந்தத் திட்டங்கள் மையமாக்கப்பட்ட திட்டங்களிலிருந்து பெரிதும் வேறுபடுகின்றன. இந்த நாடுகளில் தனியார் சொத்துரிமை பெருமளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டு மதிக்கப்படுகிறது. எனவே, இந்த நாடுகளின் திட்டங்கள், அரசு மேற்கொள்ளும் உற்பத்தி, மற்றும் பணிகளுக்காக உள்ள சிறிய பகுதிக்காகவும் தனியார் துறை மேற்கொள்கிற பெரிய பகுதிக்காகவும் சேர்த்து அமைக்கப்படுகின்றன. தனியார் சொத்துரிமை இருப்பதால் தனியார் துறைக்கு இருக்கிற வாய்ப்புகளைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான் (Indicative Planning) இந்த நாடுகளின் திட்டங்கள் மிகுதியான அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் இந்திய மக்கள் தொகை 1980–81–ஆம் ஆண்டில் 68.4 கோடி. இதில் உழைக்கும் மக்கள் தொகை 27 கோடி, உழைக்கும் மக்களுள் 2–3 கோடி மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை, மற்றும் தனியார் பட்டறைகள் போன்ற ஒழுங்குற்ற துறையிலும் (Organised Sector) மற்றவர்கள் வேளாண்மை, அன்றாடக் கூலிவேலை போன்ற ஒழுங்குறாத் துறையிலும் (Unorganised Sector) வேலை செய்கிறார்கள். கீழ்வரும் பட்டியன் 1980–இல் வேலை வாய்ப்பு இல்லாதவர் நிலையைக் காட்டுகிறது. கோடிகளில் !! 15–59 வாய்ப்பற்றவர்கள் || 1.2 || 1.14 || 1.13 சராசரி வேலை வாய்ப்பற்றவர்கள் || 1.2 || 1.16 || 1.14 சராசரி வேலை வாய்ப்பற்றவர்கள் || 2.1 || 2.0 || 1.9 ::ஆதாரம்: Statistical outline of India–1982. முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டக் காலங்களிலும் புதிய வேலை வாய்ப்புகள் முறையே 0.7 கோடி, 1.0 கோடி, 1.45 கோடி அளவில் மிகுந்தன. ஆனால், உழைக்கும் மக்கள் தொகைக்குப் புதிதாகக் கூட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை இதே காலத்தில் 0.9 கோடி, 1.17 கோடி, 1.7 கோடியாக இருந்தது. அதாவது, ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்ட இறுதியிலும், வேலையில்லாத் திண்டாட்டம் மேலும் மேலும் மிகுந்து கொண்டே வந்திருக்கிறது. அதுபோலவே, படித்து, வேலையில்லாமல், வேலைவாய்ப்பு நிறுவனங்களில் பதிவுசெய்து காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து மிகுந்துகொண்டே வந்திருக்கிறது. இந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை, ஒழுங்கமைதி பெற்ற பிரிவை விரிவாக்கி வளர்ச்சியுறச் செய்வதன் மூலம் ஒழித்துவிட முடியும் என்னும் நம்பிக்கையை, நான்கு ஐந்தாண்டுத் திட்டக் காலத்தின் நடைமுறையிலிருந்தே இழந்து விட்டதால், கடந்த இரண்டு திட்டக் காலங்களில் ஒழுங்கமைதி பெறாத வேளாண்மை, மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சியின் மூலம்தான் முழு வேலைவாய்ப்புப் பெறமுடியும் என்னும் கருத்து வளர்ந்திருக்கிறது. எனவே, திட்டங்கள் அவற்றிற்கு ஏற்றமுறையில் மாற்றப்பட்டுள்ளன. சிற்றூர்களில் (1977–78) அன்றைய விலைகளில் மாத வருவாய் தலைக்கு உரூ. 65க்குக் குறைவாகவும், நகர்ப்புறங்களில் மாத வருவாய் தலைக்கு உரூ. 75க்குக் குறைவாகவும் உடையவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழிருப்பவர்களாகக் கருதப்பட்டு, இந்திய மக்கள் தொகையில் 48.13 விழுக்காடு வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அதே அளவீட்டின்படி, அதே ஆண்டில், தமிழ் நாட்டில் மக்கள் தொகையில் 52% வறுமைக் கோட்டிற்குக் கீழிருப்பதாகக் கணக்கிட்டுள்ளார்கள். வேலைவாய்ப்பின்மையும் வறுமையும் நாட்டின் மிகப் பெரிய பொருளாதாரச் சிக்கல்கள். இந்திய அரசின் திட்டங்களும் வரவு செலவுத் திட்டங்களும் இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. மத்திய அரசின் வரவு செலவுத் திட்டத்தில் (Budget) கிட்டத்தட்ட 17.5% வருவாய், முதலீட்டு வரவாக (Revenue and Capital receipts) அமைகிறது. மத்திய அரசு 1979–இல், 179 பொதுத் துறை நிறுவனங்களில் உரூ. 15,600 கோடிக்கு மேல் முதலீடு செய்திருந்தது. அஞ்சல், தந்தித்துறை, இரயில்வேக்கள், கனரகத் துறையைச் சேர்ந்த 18 பெரிய நிறுவனங்கள், தொழில் வங்கிகள் போன்றவையும் இவற்றுள் அடங்கும். மத்திய அரசின் ஆறாம் ஐந்தாண்டுத் திட்டம் (1980–85) வறுமையை ஒழிப்பதைத் தலையாய குறிக்கோளாகக் கொண்டது. நாட்டு வருவாயின் வளர்ச்சி வீதத்தை மிகுதிப்படுத்தல், தொழில்களைப் புதுமைப்படுத்தல், பொருளாதாரத் தொழில் நுட்பத் தன்னிறைவு பெறுதல், ஆற்றல் (Energy) துறையின் விரைவான முன்னேற்றம், செல்வம்–மற்றும் செலாவணி ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்தல், வட்டார வளர்ச்சியில் சமன்பாடு காணுதல், மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்றவை திட்டத்தின் மற்றக் குறிக்கோள்கள். இந்தப் பட்டியலே, இந்திய மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடு எவ்வளவு பங்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட உதவுகிறது. இந்திய வளர்ச்சியைக் கீழ்வரும் விவரங்கள் ஓரளவு தெளிவாக்கும், இந்த வளர்ச்சி அரசின் நேரடியான நடவடிக்கைகளாலும் அரசு உருவாக்கிய அடிப்படைச் சமுதாய மூலதன (Social Overhead Capital) உதவியோடு தனியார் துறையின் நடவடிக்கைகளாலும் ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியில் எந்த அளவுக்கு அரசுக்குப் பங்கிருக்கிறது என்று தனிப்படுத்திக் காட்ட இயலாது. 1960 100 || 83 || 401 ::குறிப்பு: 1980-81 பற்றிய பெரும்பாலான புள்ளி விவரங்கள் இப்போதைக்கானவை (Provisional) அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவை 1978–79–ஆம் ஆண்டுக்கானவை. ::ஆதாரம்: ‘Statistical Outline of India’–1982. தமிழ்நாடு அரசு: இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் உள்ள கூட்டாட்சி அமைப்பில் (Federal setup) மாநில அரசுகளுக்குத்தான் கல்வி, மருத்துவம், சாலைப் போக்குவரத்து, ஊரக மின்சாரப் பகிர்வு போன்ற தலைசிறந்த சமூகப் பணிகளைச் செய்யும் பொறுப்பு வரையறை செய்யப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழக அரசின் பொருளாதாரத்தை ஒரு மாநில அரசின் பொருளாதார எடுத்துக்காட்டாகக் கொண்டு கீழ்வரும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தேசிய வருவாய் 1930–71–இலிருந்து 1979—80 வரை 3.7% ஆண்டு வளர்ச்சி வீதம் கொண்டிருந்தது. ஆனால், 1980–81–இல் பருவமழை தவறியதன் காரணமாகவும் வாணிக மந்தத்தின் காரணமாகவும் அதன் வளர்ச்சிவீதம் 8.12% குறைந்து விட்டது. இதன் காரணமாக, 1970–71-க்கும் 1980–81-க்கும் இடையே மாநிலத் தேசிய வருவாயின் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.4% ஆகக் குறைந்துவிட்டது. தமிழ்நாடு அரசு 1980–81–இல் மாநிலத் தேசிய வருவாயில் 13.9% வரிகள் மூலம் வருவாயாகப் பெற்றது. அது மட்டுமன்றி, மத்திய அரசின் வரிகளில் தமிழ்நாட்டின் பங்காக, மேலும் மாநிலத் தேசிய வருவாயில் 4.8%க்குச் சமமான அளவு தனது பங்காகப் பெற்றிருக்கிறது. அதாவது, தமிழ்நாட்டின் மொத்தத் தேசிய வருவாயில் கிட்டத்தட்ட 18.7% மத்திய, மாநில அரசு வரிகளின் மூலம் தமிழ்நாட்டு அரசுக்கு வருவாயாகக் கிடைக்கிறது. 1980–81–இல் தமிழ் நாட்டு மாநிலத் தேசிய வருவாயில் 26.6% தமிழ் நாட்டு அரசின் வரவு செலவுத் திட்டத்தின் வருவாய்க் கணக்கு (Revenue Account), முதலீட்டுக் கணக்கு (Capital Account) ஆகிய இரண்டிலும் வந்த வரவுக்குள் தமிழ்நாட்டு அடங்கி இருந்தன. அதாவது, மாநிலத் தேசிய வருவாயில் கால் பங்குக்கு மேல், தமிழ்நாட்டு அரசின நேரடியான கட்டுப்பாட்டுக்குள் அடங்கியிருந்தது. ::தமிழ்நாட்டின் வளர்ச்சியைக் காட்டக் கீழ்வரும் புள்ளி விவரங்கள் தரப்பட்டுள்ளன. மெட்ரிக் டன்கள் || 3,143 || 6,884 || 5,651 எஸ்.நீ.