அதியமான் கோட்டை
atiyamāṉ kōṭṭai
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர்.
தர்மபுரி மாவட்டத்தில், தர்மபுரி வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் தர்மபுரியிலிருந்து மேற்காகச் சேலம் செல்லும் நெடுஞ்சாலையில் எட்டுக் கி.மீ. தொலைவிலுள்ளது. சங்க நூல்களில் கூறப்படும் அதியமான்கள் என்னும் குறுநில மன்னர்களின் தலையாய நகரமாக இவ்வூர் கருதப்படுகிறது. சங்ககாலத்தில் இவ்வூரில் மக்கள் குடியிருந்ததற்கான சான்றுகளாக அவர்கள் பயன்படுத்திய கருப்புசிவப்பு வண்ணம் கொண்ட மட்கலச் சிதைவுகள் கிடைத்துள்ளள. இங்கு முற்காலத்தில் கோட்டை ஒன்று இருந்ததற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. ஊரினைச் சுற்றிக் கோட்டைச் சுவர் போன்ற மண்மேடு காணப்படுகிறது. இவ்வூரில் ஒய்சாளர் காலத்திய கோயில் ஒன்றும், பிற்காலச்சோழர் காலக் கோயிலொன்றும் உள்ளன. சமண தீர்த்தங்கரரின் சிலையொன்றும் சமணத்தோடு உள்ள தொடர்பைப்பறைசாற்றிக் கொண்டுள்ளது. இவ்வூரில்
சுடுமண் பொம்மைகள்
சோழர், ஒய்சாளர், விசயநகர அரசர் ஆகியோரின் கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இங்குச் சென்னைப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையினர் 1981, 1982–ஆம் ஆண்டுகளில் அகழாய்வினை மேற்கொண்டனர். இவ்வூரில் ஐந்து குழிகள் தோண்டப்பட்டன. குழிகளின் அடிமட்டத்தில் இரும்புக் காலத்தைச் சேர்ந்த கருப்பு சிவப்பு மட்கலன்கள் கிடைத்தன. சோழர் காலத்தைச் சார்ந்த செங்கல் மேடையின் ஒரு பகுதி கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வில் கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள், சிவப்புக் கலவை பூசப்பட்ட மட்கலன்கள், ரௌலட்டட் என்னும் உரோமானிய நாட்டு மட்கலத் துண்டுகள் ஆகியவை கிடைத்தன. மணிகள், இரும்புக் கருவிகள், செம்பு, பித்தளைப் பொருள்கள், சுடுமண் பொம்மைகள், கண்ணாடி வளையல்கள், பொன்னை உருக்குகின்ற சிமிளிகள் ஆகியனவும் கிடைத்தன.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 363)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xwz2hpgh/
தமிழ்“அதியமான் கோட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xwz2hpgh/APA
Oliyon Research. (2026). அதியமான் கோட்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xwz2hpgh/MLA
"அதியமான் கோட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xwz2hpgh/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment