சோழ நாட்டில் இருந்த பல நாட்டுப் பிரிவுகளுள் இன்னம்பூர் நாடும் ஒன்று. இக்காலத்திய தஞ்சை மாவட்டத்தின் கும்பகோண வட்டமும் பாபநாச வட்டமும் அடங்கிய நிலப்பரப்பே பண்டு இன்னம்பூர் நாடு எனச் சொல்லப்பட்டது. இதன் தலைமை சான்ற நகரம் இன்னம்பூர் (இன்னம்பர்) ஆகும். இதன் ஏனைய பகுதிகள் அசூர் (அசுகர்), ஆதனூர், சத்தியமங்கலம், ஏரகம் (மும்முடி சோழ மங்கலம்), கருப்பூர், காட்டூர், கோனூர், கோட்டையூர், மருத்துவக்குடி, மேலக்காவேரி, பெரியன்குடி, வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம், பராந்தக சதுர்யேசி மங்கலம், திருவைகாவூர் ஆகியன ஆகும்.