இராமா நந்தி
irāmā nanti
இராமா நந்தி என்பது ஓர் இயக்கம்.
இராமா நந்தி என்பது ஓர் இயக்கம். இதனை கி.பி. 15–ஆம் நூற்றாண்டில் இராமானந்தர் என்னும் பெரியார் தோற்றுவித்தார். இராமபிரான்மீதும் சீதையின்மீதும் கொண்டிருக்கும் காதலையும் பக்தியையுமே இராமானந்தர் வலியுறுத்தினார். இலக்குவன், அனுமன் ஆகியவர்கள் மீதும் அன்பும் பக்தியும் கொள்ள வேண்டுமென்று இவர் அறிவுறுத்தினார். இறைவனுக்கு முன்னர்ச் சாதி, சமயப் பூசல்கள் அனைத்தும் மறைந்துவிடக் கூடியவை என்று இவர் போதித்தார், இராமானந்தரின் தலையாய சீடர்கள் பன்னிருவருள் கபீர் முதன்மையானவர். இவரை முகமதியர் ஒருவர் வளர்த்ததாகக் கூறுவர்.
இராமாநந்திகளில் உள்ள துறவிகளைப் பைராகிகள் என்றும், அவதூதர்கள் என்றும் கூறுகின்றனர். பைராகி என்பதற்கு ஆசைகளை அறுத்தவன் என்பதும், அவதூதர் என்பதற்கு விடுதலையானவர் என்பதும் பொருள். இத்துறவிகள் வட இந்தியாவில் பல மடங்களை நிறுவினார்கள். இராமாநந்தர் எந்த ஓர் இயக்கத்தையும் உருவாக்க விரும்பவில்லை. அதனால், அவரை வழிபட்டவர்கள் இம்மடங்களில் மட்டும் இருக்கவில்லை. இராய்தாசர், சேனர் போன்றவர்கள் இராமானந்தரின் சீடர்களுள் சிலர்.
இராமானந்தர் மக்களின் தாய் மொழியையே பயன்படுத்தினார். இதன் விளைவாக கி.பி. 16, 17–ஆம் நூற்றாண்டுகளில் பக்தி இயக்கங்களில் பெரு மாற்றங்கள் நிகழ்ந்தன. துளசிதாசர் போன்ற கவிஞர்களும், மீராபாய் போன்ற பெண்பாற் புலவர்களும் இராமானந்தரின் இயக்கச் செல்வாக்கிற்குப் பின் தோன்றியவர்களே. இராமாநந்திகள் சாதி வேறுபாட்டில் நம்பிக்கையில்லாதவர்கள். இவர்களை இராமவதுக்கள் என்றும் கூறுவர்.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 4, பக். 141)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xtzm24wy/
தமிழ்“இராமா நந்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xtzm24wy/APA
Oliyon Research. (2026). இராமா நந்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xtzm24wy/MLA
"இராமா நந்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xtzm24wy/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment