செலீனியம்
celīṉiyam
இது தனிம மீள் வரிசை அட்டவணையில் VIA தொகுதியில், கந்தகத்திற்கு அடுத்து அமைந்துள்ள தனிமமாகும்.
இது தனிம மீள் வரிசை அட்டவணையில் VIA தொகுதியில், கந்தகத்திற்கு அடுத்து அமைந்துள்ள தனிமமாகும். இதன் குறியீடு Se; அணு எண் 34; அணு எடை 78. 96. செலீனியத்தை (selenium) முதன் முதலாக, ஜெ.ஜெ. பெர்சீலியஸ் என்பார், 1917ஆம் ஆண்டில் கந்தகத்திலிருந்து பிரித்தெடுத்தார். இதன் பண்புகள் டெலூரியத்தின் பண்புகளை ஒத்துள்ளன.
தனிம அமைப்புகள். செலீனியம் ஆறு புற வேற்றுமை உருவங்களாக, இயற்கையில் காணப் படுகிறது. இவற்றுள் α–மோனோ கிளினிக், β–மோனோ கிளினிக், சாம்பல் முக்கோண (grey trigonal) அமைப்பைக் கொண்ட திண்மப் படிக உருவங்கள் முக்கியமானவை. கார்பன் டைசல்ஃபைடில் கரைந்த செலீனியம் கரைசலைப் படிகமாக்கினால், மோனோ கிளினிக் அமைப்புக் கிடைக்கிறது. இப்புற வேற்றுமை உருவங்களின் அடிப்படை அமைப்பு எட்டுச் செலீனியம் அணுக்கள் மடிப்பான (puckered) அமைப்பில் இணைந்து, α, β வடிவங்களாக மாறி அமைவதைப் பொறுத்துள்ளது.
முக்கோண அமைப்புகளை விட, மோனோ கிளினிக் அமைப்புகள் குறைந்த நிலைப்புத் தன்மையுடையவை. மோனோ கிளினிக் படிகத்தை, 217°Cக்குக் கீழ் வெப்பப் படுத்தினால், அது சாம்பல் முக்கோண அமைப்புடைய படிகமாகிறது; அறை வெப்ப நிலையில், இருளான சூழலில் இவ்வமைப்பு குறைந்த மின் கடத்தும் திறனைப் பெற்றுள்ளது. ஆனால், ஒளியுள்ள சூழ்நிலையில், இதன் மின் கடத்தும் திறன் ஆயிரம் மடங்கு மிகுதியாகிறது. வெப்ப நிலை உயர்வும் கடத்தும் திறனை அதிகரிக்கிறது.
செலீனியம் சிவப்பு, கறுப்பு ஆகியன படிகமில்லா உருவங்களாகவும், கண்ணாடி போன்ற அமைப்புடனும், மேலும் மூன்று படிகமில்லா உருவங்களிலும், காணப் படுகின்றன. சிவப்பு உருவம் கார்பன் டைசல்ஃபைடில் கரைகிறது. இதை மெதுவாக 30°Cக்கு வெப்பப் படுத்தினால், கறுப்பு நிறப் புற வேற்றுமை உண்டாகிறது. உருகிய செலீனியத்தை வேகமாக குளிர்வித்தால், கண்ணாடி மிளிர்வு செலீனியப் புற வேற்றுமை உண்டாகிறது. இப்படிகமில்லாப் புற வேற்றுமைகளின் அமைப்புப் பற்றிய விவரங்கள் தெளிவாக அறியப் படவில்லை.
நீர்ம செலீனியம் பெருமளவில் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் நிலையில் கறுப்பு நிறமாகவும், மெல்லிய படலமாக இருக்கும் போது, சிவப்பு நிறத்துடனும் உள்ளது. வெப்ப நிலை உயர்வால், பாகுத் தன்மையும் (viscosity) அதிகரிக்கிறது. கொதி நிலை வெப்பத்திற்கு மேல், 685°C இல் செலீனியம் ஆவி Sen ((n=2–8) என்னும் பல அணு மூலக் கூறாகவும், 900°C இல் Se₂ மூலக்கூறுகளைக் கொண்டதாகவும், 2000°Cஇல் Se ஓரணு மூலக் கூறுகளைப் பெற்ற அமைப்பாகவும் உள்ளது.
தயாரிப்பு. செலீனியம் உள்ள கனிமங்களை வறுத்தோ, அடர் சல்ஃப்யூரிக் அமிலத்துடன் வினைப் படுத்தியோ, செலீனியம் டை ஆக்சைடு (SeO₂) பெறப் படுகிறது. இதைப் பதங்கமாக்கல் (sublimation) செய்து, அல்லது செலீனியஸ் அமிலமாக (H₂SeO₃) மாற்றித் தூய்மையாக்கலாம். செலீனியம் சல்ஃபர் டைஆக்சைடால் ஒடுக்கமடைந்து, தூய செலீனியத்தைக் கொடுக்கிறது. H_2SeO_3 + 2SO_2 + H_2O \longrightarrow Se + 2H_2SO_4 செலீனிய உற்பத்தியில், அமெரிக்க ஒன்றியக் குடியரசு, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.
முக்கியச் சேர்மங்கள். செலீனியம் காற்றில் நீல நிறச் சுவாலையுடன் எரிந்து, செலீனியம் டைஆக்சைடை உண்டாகுகிறது. செலீனியம் பல்வேறு உலோகங்கள், அலோகங்களுடன் வினை புரிகிறது. நைட்ரிக் அமிலம், அடர் சல்ஃப்யூரிக் அமிலம், அடர் கார ஹைட்ராக்சைடுகள் ஆகியவற்றில் செலீனியம் கரைகிறது. செலீனியச் சேர்மங்களின் முக்கியப் பண்புகள் அட்டவணை 1 இல் கொடுக்கப்பட்டுள்ளன.
ஹைட்ரஜன் செலீனைடு (H₂Se) என்பது நிறமற்ற, எளிதில் தீப்பற்றிக் கொள்ளும், தனித் தன்மையான நெடியுடைய ஹைட்ரஜன்–செலீனைடு சேர்மமாகும். இது ஹைட்ரஜன் சல்ஃபைடைவிட அதிக நச்சுத் தன்மையும், ஆனால், அதை விடக் குறைந்த வெப்ப நிலைப்புத் திறனும் கொண்டது. H—Se—H என்னும் இதன் வாய்பாட்டில் H—Se ஆகியவற்றிற்கிடையேயான பிணைப்பு நீளம் 0.146 nm; பிணைப்புக் கோணம் 91°. தனிம செலீனியத்தை ஹைட்ரஜன் சூழலில் வெப்பப் படுத்தும் போது, இச் சேர்மம் உண்டாகிறது. மேலும், அலுமினிய செலீனைடை நீராற்பகுத்தும் (1) ஃபெர்ரஸ் செலீனைடுடன், நீர்த்த ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை வினைப்படுத்தியும் (2) H₂Se ஐப் பெறலாம்.
<!---- பக்க ஒருங்கிணைப்புக்காக அட்டவணை, பக்கத்தின் ஆரம்பத்தில் இருந்து பத்திகளுக்கு நடுவில் நகர்த்தப்படுகிறது.---->
(2)
நீரில் கரைந்த ஹைட்ரஜன் செலீனைடுக் கரைசல் அதிக எடையுடைய உலோக அயனிகளை, அதன் செலீனைடுகளாக வீழ்படிவாக்குகிறது. M₂Se என்னும் இயல்பான வாய்ப்பாடுடைய செலீனைடு களும், MHSe என்னும் அமில செலீனைடுகளும் உள்ளன. இவற்றில் உலோக அயனி +1 ஆக்சிஜனேற்ற நிலையில் உள்ளது. கார மற்றும் கார மண் உலோகச் செலீனைடுகளின் நீரியக் கரைசல் தனிம செலீனியத்தைக் கரைத்து M₂SeX என்னும் வாய்ப்- பாடுடைய (பாலிசல்ஃபைடுகளை ஒத்த) பாலி செலீனைடுகளை உண்டாக்கும்.
.ஆக்சைடுகள், ஆக்சி அமிலங்கள். செலீனியமும், ஆக்சிஜனும் நேரடியாக வினை புரிந்து செலீனிய டைஆக்சைடை உண்டாக்குவது போலவே, தனிம செலீனியத்தை நைட்ரிக் அமிலத்தால் ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தும் (3,4) பெறலாம்.
(4)
செலீனியம் டைஆக்சைடு எளிதில் ஆவியாகும் நிறமற்ற திண்மம். இதில் செலீனியம், ஆக்சிஜன் அணுக்கள் மாறி மாறி அமைந்து, சங்கிலித் தொடராக உள்ளன. Se—O ஆகிய அணுக்களுக்கிடைப்பட்ட தொலைவு 0.178nm. இச்சேர்மம் 315°C இல் மஞ்சள்–பச்சை வண்ணமுடைய ஆவியாகிப் பதங்கமடைகிறது. நீரில் கரைந்து செலீனியஸ் அமிலத்தை உண்டாக்குகிறது. இந்த அமிலம் ஒரு வீரிய மிக்க ஆக்சிஜனேற்றி ஆகும். இது சல்ஃபர் டைஆக்சைடு, ஹைட்ரஜன், அம்மோனியா, பாஸ்ஃபரஸ், கார்பன் போன்றவற்றுடன் வினை புரிந்து, செலீனியத்தை உண்டாக்குகிறது.
செலீனியம் டைஆக்சிகுளோரைடில் கரைக்கப் பட்ட செலீனியத்துடன் ஓசோன் வினைப் படும் போது, செலீனியம் டிரைஆக்சைடு (5) உண்டாகிறது; மேலும் செலீனிக் அமிலத்தைப் பாஸ்ஃபரஸ் பென்ட்டாக்சைடால் நீர் நீக்கம் செய்யும் போதும், இது விளைகிறது (6).
3 SeO_2 + O_3 & \stackrel {Se O Cl_2} {\longrightarrow} 3SeO_3 \\ 3H_2SeO_4 + P_2 O_5 & \longrightarrow 3SeO_3 + 2H_3PO_4 3 \end{alignat}
(6)
டிரை ஆக்சைடு ஊசி வடிவம், கன சதுரம் ஆகிய இரு விதப் படிக உருவில் உள்ளது. நீருடன் செலீனியம் டிரை ஆக்சைடு வெப்ப உமிழ்வுடன் தீவிரமாக வினை புரிந்து, செலீனிக் அமிலத்தை உண்டாக்குகிறது. செலீனியஸ் அமிலத்தை ஃபுளூரினேற்றம் செய்வதாலும், செலீனிக் அமிலத்தைப் பெருமளவில் பெறலாம் (7).
H_2SeO_3 + H_2O + F_2 \longrightarrow H_2 SeO_4 + 2HF
செலீனிக் அமிலத்தின் பண்புகள், சல்ஃப்யூரிக் அமிலப் பண்புகளைப் பெரும்பாலும் ஒத்துள்ளன. சான்றாக, தாமிரத்துடன் சேர்ந்து, தாமிர செலீனேட்டை (CuSeO₄) உண்டாக்கியும், கரிமப் பொருளைத் தீய்த்தும், வினை புரிகிறது. உயர் அணு நிறை உலோக செலீனேட்டுகள் (எ-டு; பேரியம் செலீனேட், BaSeO₄) குறைந்த அளவிலேயே நீரில் கரைகின்றன.
ஹாலைடுகள். செலீனிய ஹாலைடுகளில் மோனோஹாலைடுகள், Se₂X₂ (X = CI அல்லது Br), டைஹாலைடுகள் Se X₂ (X = CI அல்லது Br), டெட்ராஹாலைடுகள் SeX₄ (X = F. CI, Br), ஹெக்சாஃபுளூரைடு (SeF₆) ஆகியன அடங்கும்.
செலீனியத்துடன் ஹாலோஜன் நேரிடையாக வினை புரிவதன் மூலம் மோனோஹாலைடுகள் உண்டாகின்றன. செலீனியம் மோனோகுளோரைடு (Se₂Cl₂) பழுப்புக் கலந்த சிவப்பு நிறமுடைய நீர்மமாகும்; இது நீருடன் பின் வருமாறு (8) வினை புரிகிறது.
டைஹாலைடுகள் வளிமப் பொருள்களாக உள்ளன; அயோடைடுகளைத் தவிர, ஏனைய டெட்ராஹாலைடுகள் தயாரிக்கப் பட்டுள்ளன. செலீனியம் டெட்ராகுளோரைடு, டெட்ராபுரோமைடு ஆகியன அறை வெப்ப நிலையில் திண்மங்கள். டெட்ராஃபுளூரைடு ஒரு நீர்மம். உயர் வெப்ப நிலையில் ஆவியாகும் போது, டெட்ராகுளோரைடு, டெட்ராபுரோமைடு ஆகியன சிதைவடைந்து, செலீனியம் டைஹாலைடையும், தனிம ஹாலோஜனையும் கொடுக்கின்றன. டெட்ராஹாலைடுகள் எளிதில் நீராற்பகுப்படைகின்றன (9).
செலீனியம் ஹாலைடுகளில் மிகக் குறைந்த வினைத் திறன் உடைய சேர்மம் செலீனியம் ஹெக்சா ஃபுளூரைடு ஆகும். உயர் வெப்ப நிலையில் மட்டும் இது அம்மோனியா (10) அல்லது கார உலோகங்களுடன் வினை புரிகிறது.
ஆக்சிஹாலைடுகள். செலீனியம் ஆக்சிகுளோரைடு நிறமற்ற, பெரிதும் பயன் படும் நீரியமில்லா (non aqueous) கரைப்பான் ஆகும். மூடிய குழாய் அல்லது கார்பன் டெட்ராகுளோரைடு கரைசலில், செலீனியம் டெட்ராகுளோரைடும், செலீனியம் டைஆக்சைடும் வினைப் படுவதால் (11) இதைப் பெறலாம். இந்த ஆக்சிகுளோரைடு
எளிதில் நீராற் பகுப்படையும் வீரிய மிக்க குளோரினேற்றக் காரணி ஆகும். ஆக்சிபுரோமைடு (SeOBr₂) ஆரஞ்சு நிறமுடைய, ஆக்சிகுளோரைடுகளை ஒத்த பண்புடைய திண்மம். ஆக்சிஃபுளூரைடு (SeOF₂) நிறமற்ற நீர்மம்; எரிச்சலூட்டக் கூடிய நெடியுடன், நீர், கண்ணாடி, சிலிக்கான் போன்றவற்றுடன் வினை புரியக் கூடியது. கூட்டுச் சேர்மங்கள் உண்டாக்க வல்லது.
நைட்ரைடு. டெட்ராசெலீனியம் டெட்ரா நைட்ரைடு (Se₄N₄) என்பது ஆரஞ்சு–சிவப்பு நிறமுடைய திண்மமாகும். கார்பன் டைசல்ஃபைடில் கரைக்கப் பட்ட செலீனியம் டெட்ராகுளோரைடு கரைசலுடன், அம்மோனியாவை வினைப் படுத்தி, இதைத் தயாரிக்கலாம் (12).
இதன் மூலக் கூறு S₄N₄ என்னும் வளைய அமைப்பை ஒத்த வடிவுடையது. இது உயர் வினை புரியும் திண்மமாகும்; உரசினாலோ, 200°Cக்கு வெப்பப் படுத்தினாலோ வெடிக்கும் தன்மையுடையது.
பல் அணு நேரயனிகள். தனிம செலீனியம் சல்ஃப்யூரிக் அமிலத்தில் கரைக்கப் படும் போது. பச்சை அல்லது மஞ்சள் நிறக் கரைசல்கள் உண்டாகின்றன. இந்தக் கரைசலை ஆய்வு செய்யும் போது, பச்சை வண்ணம் Se8+ அயனியாலும், மஞ்சள் வண்ணம் Se அயனியாலும் ஏற்படும் என்பது தெளிவாகிறது.
கரிமச் சேர்மங்கள். C–Se என்னும் பிணைப்புக் கொண்ட பல கரிமச் சேர்மங்கள் உள்ளன. இவை செலீனால் (RSeH), செலீனிக் அமிலங்கள் (RSeOH), கரிம செலீனிய ஹாலைடுகள் (RSeX), டைஆர்செனைல் செலீனைடுகள் (R₂SeX, R₂Se₂), செலீனோ அமினோ அமிலங்கள், செலீனோ பெப்டைடுகள் எனப் பலவாறாகக் காணப்படுகின்றன. சில கரிம செலீனியச் சேர்மங்களின் பெயர்களும், அவற்றின் பண்புகளும் அட்டவணை 2ல் குறிப்பிடப் பட்டுள்ளன.
இயற்கையில் கிடைத்தல். புவி மேற்தோட்டில் செலீனியத்தின் மலினம் 7×10-5% என்னும் புவியின் எடை சதவீத அளவில் உள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. இது தனிம நிலையில் கந்தகத்துடன் சேர்ந்தும், உயர் அணு நிறையுடைய உலோக செலீனைடுகளாகவும் பரவியுள்ளது. இது செலியானைட் (zelianite, Cu₂ Se)₂, யுகெய்ரைட் (AgCuSe), ஜெர்மாய் (As(S₂Se)₂) கனிமங்களாகக் கிடைக்கிறது.
பயன்கள். செலீனியத்தின் முக்கியப் பயன்களுள் நிழற்படி எடுக்கும் உத்தியில் படிக உருவமற்ற செலீனியப் படிவுகளின் ஒளி உணர் திறன் தன்மையைப் பயன்படுத்துவதைக் குறிப்பிடலாம். இரும்புச் சேர்மங்கள் உடனிருக்கும் போது, கண்ணாடியில் ஏற்படும் ஒளி மிளிர்வை அகற்றி, நிற நீக்கம் செய்யவும், நெகிழிகள் (plastics), வண்ணப் பூச்சுகள் (paints), மெருகுப் பூச்சுகள் (enamels), கண்ணாடி, மட்பாண்டம், எழுதும் மை போன்ற பொருள்களில் நிறமிகளாகவும் செலீனியம் பயன் படுகிறது. இதன் ஏனைய பயன்களுள் முதன்மையானவை, விலங்குகளின் ஊட்டச் சத்துப் பொருளாகச் சேர்க்கப் படுதல், உலோகப் பூச்சுப் பூசுதல், உயர் வெப்ப நிலை மசகுப் பொருளாகப் பயன் படுதல், சில பெட்ரோலியப் பொருள்களை மாற்றியமாக்கும் (isomerisation) வினையில் வினையூக்கியாகச் செயல் படுதல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். —த. தெய்வீகன்
மூலம் · source: அறிவியல் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 10, பக். 870)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xtqzbpvb/
தமிழ்“செலீனியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xtqzbpvb/APA
Oliyon Research. (2026). செலீனியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xtqzbpvb/MLA
"செலீனியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/xtqzbpvb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment